வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 13 ஜூலை, 2012

சொந்தப் பிரச்சினையை முதலில் தீருங்கள்: ஹரினுக்கு மேர்வின் அறிவுரை



யலவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிப்பதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தன் உள்வீட்டுப் பிரச்சினைக்கு முதலில் தீர்வு காண வேண்டுமென அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மேர்வின் சில்வா, அவருக்கு வாக்களித்த மக்களினால் துரத்தப்படுவாரென நேற்றைய ஊடகவியலாளர்கள் சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்திருந்தார். இக்கருத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். 'பெர்னாண்டோ அரசியலுக்கு புதிதாக வந்தவரென்ற வகையில் அரசாங்கத்தை எதிர்க்க வேண்டுமென்பதற்காக எதிர்க்கக்கூடாது. தற்போது ஆக்கபூர்வமான விமர்சனங்களே தேவைப்படுகின்றன. ஆனால் பெர்னாண்டோ எதனைச் செய்கின்றாரெனத் தெரியவில்லை. புதிதாக வந்தவர் ஆக்கபூர்வமான விமர்சனங்கள் மூலம் தனது ஆளுமையை விருத்தி செய்ய முடியுமென்பதுடன், அரசாங்கத்தை நல்வழிப்படுத்த முடியும்' என அமைச்சர் மேர்வின் சில்வா கூறியதாக அவரது ஊடகப் பேச்சாளர் ரெஹான் விஜயரட்ன கூறினார். 'பெர்னாண்டோவுக்கு இது எனது நட்பு ரீதியான அறிவுரையாகும். நீங்கள் சொந்தப் பிரச்சினைகளை தீர்த்தால் உங்களுக்கு சிறந்ததொரு அரசியல் எதிர்காலம் இருக்கும். நான் கட்சியின் ஒழுக்கக் கோட்பாட்டை மீறி நடந்துகொண்டால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஒழுக்காற்றுக்குழு தக்க நடவடிக்கை எடுக்கும். ஐக்கிய தேசியக் கட்சியாளரான நீங்கள், உங்கள் கட்சியில் நிலவும் தலைமைத்துவப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்' எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’