வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 9 ஜூலை, 2012

வேம்படி மகளிர் கல்லூரிக்கு நிரந்தர அதிபர்!


வே ம்படி மகளிர் உயர்தரப் பாடசாலைக்கென நிரந்தர ஆசிரியர் நியமனம் தொடர்பில் நடவடிக்கையெடுத்த பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு பாடசாலைச் சமூகத்தினர் தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
யாழ்.மாவட்டத்தின் தேசிய பாடசாலைகளில் ஒன்றான வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு அமைச்சர் அவர்கள் இன்றைய தினம் (9) விஜயம் மேற்கொண்டு அதிபரின் நிரந்தர நியமனம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கமளித்தார்.

கடந்த இருவாரங்களாக நிரந்தர அதிபர் நியமிக்கப்படாமையினால் கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகளில் தாம் எதிர்நோக்கி வந்த இடர்பாடுகள் தொடர்பாக பாடசாலைச் சமூகத்தினர் எடுத்து விளக்கினர்.

இதன்போது பாடசாலைச் சமூகத்தினர் மத்தியில் உரையாற்றிய அமைச்சர் அவர்கள் மாணவச் செல்வங்கள் தமது நோக்கத்தை உணர்ந்து கல்வியைச் கற்பதுடன், ஆசிரியர்களும் கற்பித்தல் செயற்பாடுகளில் தமது கடமைகளை உணர்ந்து செயற்பட்டு சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து பாடசாலை அபிவிருத்திக்குழுவையும் சந்தித்த அமைச்சர் அவர்கள் பாடசாலை அபிவிருத்தி மற்றும் மேம்பாடு தொடர்பாகக் கலந்துரையாடினார்.

இதன்போது பாடசாலை அதிபர் திருமதி ராஜினி முத்துக்குமாரன், யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா பாடசாலை அபிவிருத்திக் குழுத்தலைவர் இரா.செல்வவடிவேல் உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் உடனிருந்தனர்.





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’