வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 9 ஜூலை, 2012

நித்தியானந்தாவுக்கு பிறப்பித்த சம்மனை பத்திரிகைகளில் விளம்பரமாக வெளியிட மதுரை கோர்ட் உத்தரவு!



நி த்தியானந்தாவுக்குப் பிறப்பித்த கோர்ட் சம்மனை பத்திரிகைகளில் விளம்பரமாக வெளியிட மதுரை மாவட்ட கூடுதல் முதலாவது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை இளைய ஆதீனமாக நித்தியானந்தாவை நியமித்தது செல்லாது, சைவ நெறிமுறைகளுக்குப் புறம்பாக இந்த நியமனம் நடந்துள்ளது.எனவே இதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கோரி மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதை விசாரித்த கோர்ட் மதுரை ஆதீனம் மற்றும் நித்தியானந்தா ஆகிய இருவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டது.
இதுதொடர்பாக சம்மனும் அனுப்பப்பட்டது. சம்மனை மதுரை ஆதீனம் வாங்கிக் கொண்டார். ஆனால் நித்தியானந்தா பெற மறுத்து விட்டார். சம்மனை வாங்கிய ஆதீனமும் கோர்ட்டுக்கு வர மறுத்து வருகிறார். இந்த நிலையில் இன்று இந்த வழக்கு நீதிமன்றத்தில் வந்தபோது மனுதாரர்கள் மணிவாசகம், தியாகராஜன் ஆகியோர் சார்பில் ஆஜரான வக்கீல்கள், நித்தியானந்தா வேண்டும் என்றே கோர்ட் சம்மனைப் பெற மறுத்து வருவதாக குற்றம் சாட்டினர். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி ராஜசேகர், நித்தியானந்தா வேண்டும் என்றே சம்மனை பெற மறுத்து வருவதால் அவருக்கு அனுப்பப்பட்ட சம்மனை பத்திரிகைகளில் விளம்பரமாக வெளியிடுமாறு அதிரடி உத்தரவிட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’