வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 12 ஜூலை, 2012

புலிகளை ஆதரிப்போருக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவு



ந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள அமைப்பான விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் நாடு அரசுக்கு இந்திய மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், தமி ழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த உத்தரவு குறித்த விபரங்களை, அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் தமிழக காவல் துறை ஆணையாளர் மற்றும் சேலம், சென்னை, கோவை, திருச்சி மதுரை, திரு நெல்வேலி பிரதி காவல் துறை ஆணையர் கியூ பிரிவு குற்றப் புலனாய்வு நுண்ணறிவுப் பிரிவு காவல் துறையினர் போன்றோருக்கு இந்திய மத்திய உள் துறை அமைச்சின் இணைச் செயலாளர் தர்மேந்திர சர்மா அனுப்பி உள்ளார். தமிழருக்கு என தமிழீழம் உருவாக்கும் நோக்கம் இந்திய நாட்டின் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலாக அமையும் என்பதால் சட்ட விரோத நடவடிக்கை வரம்புக்குள் வருகிறது. தோல்வி அடைந்த பின்னர் கூட, தனி ஈழம் என்ற கொள்கையை கை விடலாம் ஐரோப்பாவில் நிதி திரட்டியும் பிரசார நடவடிக்கைகள் வழியாகவும் தனி ஈழம் அமைப்பதற்காக மறைமுகமாக செயல் பட்டு வருவதுடன் விடுதலைப் புலிகள் தலைவர்கள் அல்லது போராளிகள் சிதறிக் கிடக்கின்ற தீவிரவாதிகளை ஒன்று சேர்ப்பதற்கு மீண்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பிரிவினை வாத தமிழ் பற்றார்வக் குழுவினரும், விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களும் மக்களிடையே பிரிவினைவாதப் போக்கினைத் தொடர்ந்து வளர்த்து வருவதுடன் தமிழ் நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அடித்தளம் அமைத்து வருவதால் இந்திய ஒருமைப்பாடு சிதையும் சூழல் உள்ளது. அதனால் பொது அமைதிக்கு தொடர் அச்சுறுத்தல் குந்தகம் விளைவிப்பதாகக் கருதி சட்ட விரோதமான அமைப்பாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் வன்முறை மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் இந்திய மக்களின் பாதுகாப்புக்கு தொடர் அச்சுறுத்தலாக இருக்கிறது. எனவே, 1967 ஆம் ஆண்டு சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தில் வழங்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சட்ட விரோத அமைப்பாக அறிவித்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டதும் உடனடியாக செயலுக்கு வரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’