வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 17 ஜூலை, 2012

செயலுக்கு முன்னுரிமை கொடுத்து நாம் மக்கள் பணிசெய்து வருகின்றோம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவிப்பு.


ராலி தெற்கு, வட்டுக்கோட்டையிலுள்ள களவத்துறை விளையாட்டுக் கழகத்தின் 65வது ஆண்டு நிறைவையொட்டிய ஆடிவிழா நிகழ்வு இன்றைய தினம் சிறப்பாக நடைபெற்றது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் டக்ளஸ் தேவலானந்தா கலந்து கொண்டார். அங்கு பிரதம விருந்தினர் உரையாற்றிய அமைச்சரவர்கள் தமிழ் அரசியல்வாதிகள் சிலர் சுயலாபங்களுக்காக குரல் கொடுத்து வரும் இந்நிலையில் மக்களின் மேம்பாட்டை கருத்தில் கொண்டு பொதுநலத்திற்காக நாம் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம் எனத்தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர் இன்றைய அமைதிச் சூழலுக்காக எமது மக்கள் அளவிட முடியாத தியாகங்களை செய்துள்ள நிலையில் அதனைப் பாதுகாத்து வளர்த்தெடுக்க வேண்டிய கட்டாயம் எமக்குள்ளது. அத்துடன் இவ்விளையாட்டு கழகத்தின்  விளையாட்டு உபகரணங்களை வைத்து பாதுகாக்கக் கூடிய வகையில் அறையொன்று இவ்வருட இறுதிக்குள் அமைத்துத் தரப்படுமெனவும் குன்றும் குழியுமாக உள்ள மைதானத்தை சமப்படுத்துவதற்குத் தேவையான மண்ணைப் பெற்றுத் தருவதற்கு விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் இதன்போது உறுதிமொழி வழங்கினார்.

கழகத் தலைவர் குகராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கழகம் சார்பில் அமைச்சர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் யாழ் போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி பவானந்தராஜா வலி மேற்கு பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவரும் ஈ.பி,டி,பியின் வலிகாமம் பிரதேச அமைப்பாளருமான பாலகிருஸ்ணன் (தோழர் ஜீவன்) உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

களவத்துறை விளையாட்டுக் கழகத்தின் 65வது ஆண்டு ஆடிவிழாவை ஒட்டி பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடாத்தப்பட்டு இறுதிப் போட்டிகள் இன்றைய தினம் மைதானத்தில் நடைபெற்றதுடன் வெற்றி பெற்ற அணிகள் மற்றும் வீர வீராங்கனைகளுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’