லங்கா மிரர் மற்றும் லங்கா எக்ஸ் நியூஸ் இணையத்தளங்களின் அலுவலகங்கள் திடீர் சோதனையிடப்பட்டு 9 ஊழியர்கள் கைதுசெய்யப்பட்டமைக்கு ஐக்கிய நாடுகள் நேற்று கவலை வெளியிட்டுள்ளது.
மேற்படி இணையத்தளங்களின் அலுவலகங்கள் சோதனையிடப்பட்டதை ஐக்கிய நாடுகள் அறிந்துள்ளதாக ஊடகவியலாளர்கள் சந்திப்பில் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார்ட்டின் நெஸக்கி தெரிவித்துள்ளார். 'நாம் கூறியிருப்பதுபோன்று இலங்கையில் மாத்திரமின்றி வேறு பல நாடுகளிலும் ஊடகவியலாளர்கள் தங்களது கடமையை எந்தவித தலையீடுகளுமின்றி செய்யக்கூடியதாக இருப்பது அவசியமாகும். இது இலங்கைக்கும் பொருந்தும்' எனவும் அவர் கூறினார். மேற்படி இணையத்தளங்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்திருந்த ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா, ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல்களின்றி தங்களது பணிகளை முன்னெடுத்துச் செல்லக்கூடியதாக இருக்க வேண்டுமெனவும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’