வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோவிலின் வருடாந்த உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ள நிலையில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அதில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
வசந்த மண்டபப் பூசையைத் தொடர்ந்து இன்று காலை 10.00 மணிக்கு இடம்பெற்ற கொடியேற்ற உற்சவத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சிறப்புப் பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டார்.
நல்லூர் கந்தசாமி கோவிலின் வருடாந்த உற்சவம் ஆண்டு தோறும் ஆடி அமாவாசை முடிந்த 6ம் நாள் கொடியேற்றத்துடன் தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறும்.
இன்று தொடங்கும் உற்சவத்தில் 10 ம் நாள் பெருமஞ்சத் திருவிழாவும், 18 ம் நாள் கார்த்திகைத் திருவிழாவும், 23 ம் நாள் சப்பறமும், 24 ம் நாள் இரதோற்சவமும், தீர்த்தோற்சவமும் மறுநாள் பூங்காவனத்துடன் இவ்வருடாந்த உற்சவம் நிறைவுபெறவுள்ளது.
இதனிடையே கோவிலுக்கு வரும் பக்தர்களின் நன்மை கருதி அமைச்சர் அவர்களின் பணிப்புரைக்கமைய யாழ்.மாநகர சபை பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் ஒழுங்கு நடவடிக்கைகளுக்காக பெருமளவு பொலிசாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நல்லூர் கோவில் இலங்கையிலுள்ள இந்துக் கோவில்களில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோயில் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’