வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 31 ஜூலை, 2012

ஆயுதக்குழுக்களின் ஆயுதங்களை களைய தேர்தல்கள் ஆணையாளர் வலியுறுத்தல்



கிழக்கில் ஆயுதக் குழுக்கள் செயற்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், தேர்தல்கள் திணைக்களம் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்கக்கோனுக்கு எழுதிய கடிதத்தில் சில அரசியல் கட்சிகளுக்கும்; தனிநபர்களுக்கும் வழங்கப்பட்ட ஆயுதங்கள் பொலிஸாரிடம் திருப்பி ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பணித்துள்ளதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர்.
கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களும் ஆதரவாளர்களும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் எனத் தெரிவிக்கப்படும் சில குழுக்களின் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியிருந்தது. இது தொடர்பில் பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்கவிடம் கேட்டபோது, ஆரம்பத்தில் இவ்வாறான நிலைமை காணப்பட்டதாகவும் இருப்பினும் தற்போது அது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கூறினார். 'எவ்வாறாயினும் சில அரசியல் கட்சிகளுக்கோ அல்லது தனிநபர்களுக்கோ ஆயுதங்கள் விநியோகிக்கப்பட்டிருந்தால், அவற்றினை தேர்தல்களுக்கு முன்பாக அவர்கள் திருப்பி ஒப்படைக்க பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். இதேவேளை மாகாணசபைத் தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறும் என்று தாங்கள் நம்புவதாக தெரிவித்துள்ள அமெரிக்கா, ஜனநாயக செயன்முறைக்கு தனது ஆதரவை வழங்கும் எனவும் கூறியுள்ளது. வெளிப்படையான மற்றும் நியாயமான தேர்தல்கள் மூலம் இலங்கையர்கள் தாம் விரும்பிய தலைவர்களை தெரிவுசெய்வார்கள் என்று தனது அரசாங்கம் நம்புவதாக அமெரிக்கத் தூதரகப் பேச்சாளர் டெய்லிமிரருக்கு தெரிவித்துள்ளார். முழு உலகிலும் சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்கள் நடைபெற ஐரோப்பிய ஒன்றியம் தனது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளது என மாலைதீவு மற்றும் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்ஸ்தானிகர் பேர்னாட் சாவேஜிடம் கேட்டபோது கூறினார். நான் இதனை இலங்கையை மாத்திரம் குறிப்பிட்டுக் கூறவில்லை எனவும் அவர் கூறினார். தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கிழக்கிற்கான தனது விஜயத்தின் பின்னர், கிழக்கின் நிலைமை தொடர்பில் ஆராய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 3ஆம் திகதி சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’