இ லங்கையின் வடபகுதிக்கான பயண எச்சரிக்கையை அவுஸ்திரேலிய வெளிவிவகார திணைக்களம் கைவிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவிலிருந்து தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் நாடுகடத்தப்பட்டு சில நாட்களின் பின் இந்த பயண எச்சரிக்கை கைவிடப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா முன்னர் இலங்கையின் வடபகுதிக்கு போகவேண்டாம் என பயண எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதேசமயம் ஆபத்தான பகுதி என அவுஸ்திரேலியா அறிவித்த பகுதியில் வாழும் அடைக்கலம் கோரிய ஒரு தமிழரை கடந்த வாரம் திருப்பி அனுப்ப எடுத்த தீர்மானத்துடன் இந்த எச்சரிக்கை முரண்படுவதாக காணப்பட்டது. ஆனால் நேற்று மாலை அவுஸ்திரேலியா வெளிவிவகாரத் திணைக்களம் இந்;த எச்சரிக்கையை புதுப்பித்து வெளியிடுவதாக அறிவித்தது. அரசியல் அடிப்படையிலான வன்முறையின் ஆபத்து உயரளவில் காணப்படுவதால் இலங்கையில் மிகுந்த கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என நாம் ஆலோசனை கூறுகின்றோம். இலங்கையின் வடமாகாணத்திற்கு செல்ல வேண்டாம் என நாம் இப்போது ஆலோசனை கூறவில்லை என புதுப்பித்த எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில் இலங்கை தொடர்பான ஆலோசனை மிகுந்த கவனமாக நடந்துகொள்ளுங்கள் என அமைகின்றது. அவுஸ்திரேலியாவின் நான்குமட்ட எச்சரிக்கையில் இது இரண்டாவதாக அமைகின்றது. பயணம் செய்ய வேண்டாம் என்பது ஆகவும் கூடிய எச்சரிக்கை ஆகும். அந்தோனி என்பவர் 2010இல் அவுஸ்திரேலியாவில் அரசியல் அடைக்கலம் கோரியிருந்தார். அவரது மேல்முறையீடுகள் சகலதும் நிராகரிக்கப்பட்டு அவர் அண்மையில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டார். இவர் 16 மணித்தியாலங்களாக தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். பின்னர் இலங்கை அரசாங்கம் ஒழுங்குசெய்த பத்திரிகை மாநாட்டில் பேசியபோது தான் சித்திரைவதை செய்யப்பட்டதாக கூறவில்லை. இவர் திருப்பி அனுப்பியபோது அவுஸ்திரேலிய அதிகாரிகள் தன்னை தாக்கியதாக கூறினார். புதிய பயண ஆலோசனை ஏனைய தூதரகங்களின் எச்சரிக்கை மட்டங்களை ஒத்துள்ளதாக ஒரு வெளிவிவகார அதிகாரி கூறியுள்ளார்














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’