வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 3 ஜூலை, 2012

இன்டர்நெட்டில் காட்டுத் தீயாக பரவும் பிங்கி மருத்துவப் பரிசோதனை வீடியோ!



ர்ச்சைக்குரிய பிங்கி பிராமனிக்குக்கு மருத்துவ பரிசோதனை செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி ஒன்று இன்டர்நெட்டில் பரவி வருகிறது.
இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தக் காட்சியை யார் கசிய விட்டது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் தடை ஓட்டப் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றவர் பிங்கி. இவர் மீ்து சமீபத்தில் ஒரு பெண் கொல்கத்தா போலீஸில் புகார் கொடுத்தார். அதில்,பிங்கி ஒரு ஆண் என்றும் தன்னுடன் அவர் வசித்து வந்ததாகவும், தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார் என்றும் அப்பெண் தனது புகாரில் கூறியிருந்தார். இதையடுத்து பிங்கி கைது செய்யப்பட்டார். அவருக்கு கொல்கத்தா மருத்துவமனையில் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. மேலும் ஒரு முக்கிய சோதனையும் நடத்தப்படவுள்ளது. இந்த நிலையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அவருக்கு நடந்த மருத்துவப் பாலின பரிசோதனையின் காட்சி அடங்கிய வீடியோ பதிவு ஒன்று இன்டர்நெட்டில் வெளியாகி விட்டது. 29 விநாடிகள் இந்த காட்சி ஓடுகிறது. அந்த சோதனையின்போது பிங்கி உடலில் ஆடைகள் இன்றி காணப்படுகிறார். அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்படுவது போல காட்சி உள்ளது. பிங்கி முதல் முறையாக கைது செய்யப்பட்டபோது அவருக்கு கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் போலீஸார் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றிருந்தனர். அங்கு நடந்த மருத்துவப் பரிசோதனை காட்சிதான் தற்போது வெளியாகியுள்ளதாக கருதப்படுகிறது. இந்த வீடியோ வெளியீடு குறித்து பிங்கியின் வக்கீல் துஹின் ராய் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அந்த வீடியோவை நான் இதுவரை பார்க்கவில்லை. ஆனால் இதை வெளியிட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். இது மிகவும் கேவலமான, கொடூரமான செயல். பிங்கியின் வழக்கு ஜூலை 12ம் தேதி கோர்ட்டுக்கு வரும்போது இந்தப் பிரச்சினையை நாங்கள் எழுப்புவோம் என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’