வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 16 ஜூலை, 2012

புகலிடம் கோருவோரை கடலில் வைத்து திருப்பி அனுப்புங்கள்: இலங்கை உயர் ஸ்தானிகர்


வுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் சென்று அகதி அந்தஸ்து கோருபவர்களை கடலில் வைத்து திருப்பி அனுப்புவது மனிதக் கடத்தலை தடுப்பதற்கு வினைதிறனான நடவடிக்கையாக அமையும் என அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் திசேர சமரசிங்க கூறியுள்ளார்.
படகுகளை திருப்பி அனுப்புவது மக்களை தடுக்கும். அதாவது இது உடல் ரீதியான ஒரு தடையாகும். அவர்கள் இலங்கை கரையிலிருந்து வெளியேற முடியாது என்பதை புரிந்துகொள்வார்கள்' என ஏபிசி வானொலிக்கு முன்னாள் கடற்படைத் தளபதியான அட்மிரல் சமரசிங்க கூறியுள்ளார். "படகுகளை திருப்பி அனுப்பினால் புகலிடம் கோருவோருக்கு அவுஸ்திரேலியாவை அடைய வேறு வழி இல்லை. அவர்கள் சிறப்பாக கல்வி கற்றவர்கள் அல்லர். அவர்களிடம் பணமும் இல்லை" என அவர் கூறியுள்ளார். எனினும், புகலிடம் கோருவோரை திருப்பி அனுப்புவது குரூரமானது என அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸின் பேச்சாளர் வருணி பாலா கூறினார். "இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு உண்மையான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்" என அவர் தெரிவித்தார். அதேவேளை, படகுகளை திருப்பி அனுப்புவதில் இலங்கையைவிட அவுஸ்திரேலியா வித்தியாசமான சவாலை எதிர்கொள்வதாக அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர கிறிஸ் பிரௌன் கூறினார். இலங்கைக் கடற்படையினர் கடந்த வார இறுதியில் மீன்பிடி றோலர் படகுகளை வழிமறித்து 131 பேரை கைது செய்யதமை குறிப்பிடத்தக்கது. அவுஸ்திரேலிய கடற்பரப்பில் அல்லது சர்வதேச கடற்பரப்பில் வைத்து படகுகளை திருப்பு அனுப்புவதானால், சர்வதேச சட்டத்தின்படி அவர்கள் முதலில் மீட்பு அதிகாரிகளால் அருகிலுள்ள துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட வேண்டும். இலங்கைக்கு அவ்வாறான நிலை இல்லை. புகலிடம் கோருவோரின் ஏனைய தாய்நாடுகளுக்கும் இடைமறிப்பு நடவடிக்கைகளில் இவ்வாறான நிலை இல்லை' என அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’