வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 16 ஜூலை, 2012

50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் இந்தியாவின் திட்டம் 44 ஆயிரமாக குறைப்பு



லங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்குப் பகுதி மக்களுக்காக 50 ஆயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்திருந்த இந்தியா, தற்போது 44 ஆயிரம் வீடுகளை மட்டுமே கட்டிக் கொடுப்பதற்கான உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த 2010ஆம் ஆண்டு புதுடெல்லி சென்றிருந்த போது, வடக்கில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 270 மில்லியன் டொலர் செலவில் 50 ஆயிரம் வீடுகளைக் கட்டித் தருவதாக இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் உறுதியளித்திருந்தார். இது தொடர்பாக அப்போது கூட்டறிக்கையும் வெளியிடப்பட்டிருந்தது. நீண்ட காலமாக இழுபறியில் இருந்து வந்த இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை வடக்கில் ஐந்து மாவட்டங்களிலும், முன்னோடியாக 1000 வீடுகளே கட்டப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வெள்ளியன்று கொழும்பில் 43 ஆயிரம் வீடுகளை வடக்கு, கிழக்கில் கட்டுவதற்கான உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது. இதன்படி 43 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கு நான்கு நிறுவனங்களுடன் உடன்பாடு செய்து கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே 1000 வீடுகளே, முன்னோடியாக கட்டப்பட்டு வரும் நிலையில், மேலும் 43 ஆயிரம் வீடுகளை கட்டுவதற்கே தற்போது உடன்பாடு செய்து கொள்ளப்பட்டுள்ளது. இதனால், மீதமுள்ள 6000 வீடுகளின் நிலை தற்போது கேள்விக்குள்ளாகியுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’