வலிகாமம் வடக்குப் பகுதியில் மேலும் 04 கிராமங்கள் குடியேற்றத்திற்காக மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
வலிகாமம் வடக்கு வீமன்காமம் மகாவித்தியாலய வளாகத்தில் இன்யைதினம் இடம்பெற்ற நிகழ்விலேயே 04 கிராமங்களும் மக்களிடம் கையளிக்கப்பட்டன.
கொல்லல்கலட்டி, தந்தை செல்வாபுரம், மாவிட்டபுரம், மாவிட்டபுரம் தெற்கு ஆகிய 04 கிராமங்களையும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அவர்கள் மக்களிடம் கையளித்தார்.
இதன்பிரகாரம் நாளைமுதல் மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமரவுள்ளனர்.
நிகழ்வில் விவசாய உபகரணங்களையும், பயன்தரு மரக்கன்றுகளையும், அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அவர்கள் வழங்கிவைத்ததுடன் அங்கிருந்த மக்களுடனும் கலந்துரையாடினார்.
குறிப்பிட்ட 04 கிராமங்களிலும் 650 வரையான குடும்பங்கள் மீளக் குடியேறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன் முதற் கட்டமாக அப்பகுதிக்கான மின்விநியோகத்தையும் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அவர்கள் சம்பிரதாய பூர்வமாகத் தொடங்கிவைத்தார்.
மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்), யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த கத்துருசிங்க, தெல்லிப்பளை பிரதேச செயலர் ஸ்ரீ மோகனன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’