நல்லூர் திருவிழா உற்சவத்தில் கடமையாற்ற விசேடமாக அறுநூறு பொலிசார் ஆலய சுற்றாடலில் கடமையாற்றவுள்ளார்கள். ஆலய உற்சவ காலத்தில் இடம்பெறக் கூடிய திருட்டுக்கள், குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதுடன் வீதிகளிலுள்ள தடை நிலையங்களில் கடமையாற்றல் உட்பட பல்வேறு கடமைகளிலும் பொலிசார் ஈடுபடவுள்ளனர்.
உற்சவ காலத்தில் சிவில் உடையிலும் சீருடையிலும் பொலிசார் கடமையாற்றுவதுடன் பெண் பொலிசாரும் இப்பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளார்கள். குறிப்பாக பெண்கள் தமது பெறுமதி மிக்க தங்க நகைகளை அணிந்து வருவதை தவிர்த்துக் கொள்வதுடன் பெறுமதி மிக்க ஆவணங்களையும் ஆலய சுற்றாடலுக்கு கொண்டு வருவதை தவிர்க்குமாறு கேட்டுகொள்ளப்பட்டுள்ளனர். ஆலய சுற்றாடலிலும் விசேடமாக பொலிசார் சிவில் உடையில் கடமையாற்றுவதுடன் வீதிகளில் செல்லும் போதும் வரும்போதும் மக்களுக்கு எற்படக் கூடிய சிரமங்களை தவிர்க்கும் முகமாகவும் பொலிசார் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக்பெரேரா தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’