வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 25 ஜூன், 2012

தீவகத்தின் சகல அடிப்படைத் தேவைகளும் விரைவில் எம்மால் பூர்த்தி; செய்யப்படும் ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின்


பின்தங்கிய பிரதேசங்கள் எனக் குறிப்பிடப்படுகின்ற தீவகப் பிரதேசத்தை சகல வழிகளிலும் அபிவிருத்தி செய்து இப்பிரதேச மக்களும் ஏனைய பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களைப் போல வாழ்வதற்கேற்ற வகையில் அவர்களது சகல அடிப்படை வாழ்வாதார தேவைகளையும் விரைவில் பூர்த்தி செய்வோம் என ஈபிடிபியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்) தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
வேலணை துறையூர் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் அணுசரனையுடன் துறையூர் ஐயனார் சனசமூக நிலையம் ஐயனார் விளையாட்டுக் கழகம் என்பவற்றின் 64ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட தீவு பகுதிக்கான உதைபந்தாட்ட கிண்ணத்துக்கான போட்டிகளின் இறுதிப் போட்டி நிகழ்வுகளிலும் பரிசளிப்பு நிகழ்விலும் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கடந்த கால யுத்தத்தினால் நாம் அனைத்தையும் இழந்து இனி இழப்பதற்கு எதுவுமே இல்லையென்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். தமிழ் மக்கள் தமது வாழ்வாதாரத்தை மீண்டும் அடிப்படையில் இருந்தே கட்டியெழுப்பவேண்டியுள்ளது. எனவே இவ்வாறு வாழ்வாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப கால தாமதமாகலாம். இருந்தபோதிலும் மக்களது அவசிய வாழ்வாதார தேவைகளை இனங்கண்டு அவற்றை விரைவில் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டுள்ளோம். அவ்வாறே தீவகத்தின் அபிவிருத்தியிலுள்ள குறைகளை விரைந்து நீக்குவதற்கான செயற்றிட்டங்களையும் முன்னெடுத்துள்ளோம். தீவக மக்களும் ஏனைய பிரதேச மக்களைப் போல சுதந்திரமாகவும் சுபீட்சமாகவும் வாழ கௌரவ அமைச்சரும் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வழியில் நாமும் எமது கட்சியும் அயராது உழைத்து வருகின்றோம். இந்;த ஆண்டும் குறித்த இவ் விளையாட்டுக் கழகத்திற்கு என்னால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார். இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி.கமலேந்திரன் (கமல்) தீவுப்பகுதிப் பிரதேச இளைஞர்கள் விளையாட்டுத்துறை கல்வித்துறை ஆகியவற்றில் உயர் நிலை அடைந்து வருவதுடன் கடந்த காலத்தில் சகல துறைகளிலும் பின்தங்கிய நிலையில் இருந்த தீவக மக்கள் சமூகமானது இன்று கல்வியின் மூலம் துரித முன்னேற்றம் அடைந்து வருவதை காணக் கூடியதாக உள்ளதுடன் இதற்குச் சான்றாக கடந்த நான்கு ஆண்டுகளுக்குள் வேலனை மத்திய மகாவித்தியாலயத்தில் கல்வி கற்ற அறுபதிற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்களைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளதுடன் இதே பாடசாலையின் பழைய மாணவன் அகீபன் உதைபந்தாட்டத் திறமையின் மூலம் இந்தியாவின் தமிழ் நாட்டு மாநிலப் பல்களைக்கழகங்களின் உதைபந்தாட்ட அணியில் தெரிவு செய்யப்பட்டுள்ளமையானது தீவக மக்களுக்கு பெருமையை தேடித் தந்துள்ளதாக தெரிவித்ததுடன். அவர் தொடர்ந்து உரையாற்றும்போது தீவக பிரதேசமானது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஈ.பி.டி.பி யின் தாயகப் பிரதேசமாக விளங்குவதுடன் தீவகத்தினை சகலதுறைகளிலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களுக் எல்லாம் முன்மாதிரியாக கட்டி எழுப்புவதற்கான வேலைத்திட்டங்கள் எமது தலைவரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்ததுடன் சில சுயலாப அரசியற் கட்சிகள் தவறான பரப்புரைகளை முன்னெடுத்து தீவகமக்களுக்கும் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சிக்கும் இடையிலான நல்லுறவை கெடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. மக்கள் இவ்வாறான சுயலாப அரசியல் கட்சிகளின் அரசியலிற்கு துணை போகாது தமிழ் மக்களின் நலனை முன் நிறுத்தியதாக தனது அரசியல் பணியினை முன்னெடுத்துவரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவாகளின் அரசியல் பயனத்திற்கு எமது தீவக உறவுகளைப்போல் சகல தழிழ்பேசும் மக்களும் ஓரணியில் திரள்வதன் ஊடாக தீவகம் மட்டுமல்லாது தமிழ்மக்கள் வாழும் சகல பிரதேசங்களும் செழுமையாக கட்டியெழுப்பக் கூடிய நிலை உருவாகுமென தெரிவித்தார். இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய வேலனைப் பிரதேச சபை தவிசாளர் சின்னையா.சிவராசா (போல்) வேலனைத் துறையூர் ஐயனார் விளையாட்டுக் கழகமானது தீவகத்தின் தலைசிறந்த விளையாட்டுக் கழகமாக திகழ்வதுடன் கடந்த பல ஆண்டுகளாக நாட்டில் நடைபெற்றுவந்த கொடிய யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளமையை அடுத்து தற்சமயம் தீவகத்தில் காணப்படும் விளையாட்டுக்கழகங்கள் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளை முன்னெடுத்து தீவக இளைஞர் யுவதிகளின் விளையாட்டுத் திறமைகளை வளர்க்கும் களமாக அமைந்துள்ளதுடன் பல திறமையான வீரர்கள் இனங் காணப்பட்டு தேசிய அணிகளுக்கு தெரிவுசெய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார். இந் நிகழ்விற்கு வேலணை தெற்கு பிரதேச செயலர் மஞ்சுளாதேவி மற்றும் வேலனை மத்திய கல்லூரி முன்னாள் அதிபரும்தீவகவலய பிரதிக்கல்விப் பணிப்பாளருமாகிய அருணகிரிநாதன் துறையூர் கடற்தொழிலாளர் சங்கத்தலைவர் பாலச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.






















0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’