வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 26 ஜூன், 2012

பொன்சேகா விடுத்த அச்சுறுத்தல் குறித்து பொலிஸாரிடம் கூறவில்லை: பிரிகேடியர் வீரசிங்க



முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தன்னை சுடப்போவதாக விடுத்த அச்சுறுத்தல் பாரதூரமானது என தான் கருதியதாகவும் அது குறித்து தனது மேலதிகாரிகளிடம் முறையிட்டதாகவும் இராணுவத்திலிருந்து தப்பியோடியோருக்கு அடைக்கலம் அளித்தமை தொடர்பான வழக்கில் சாட்சியமளித்த பிரிகேடியர் பெலவத்தகே அசோக வீரசிங்க மேல் நீதிமன்றத்தில் இன்று கூறினார்.
எனினும், கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸாரிடம் 2009 நவம்பர் 25 ஆம் திகதி தான் அளித்த வாக்குமூலத்தில் இதை குறிப்பிடத் தவறியதாகவும் அவர் ஒப்புக்கொண்டார். பொன்சேகா தரப்பு வழக்குரைஞர் சாலிய பீரிஸ் குறுக்கு விசாரணை செய்தபோதே சாட்சியான பிரிகேடியர் அசோக வீரசிங்க மேற்கண்டவாறு கூறினார். 2009 நவம்பரில் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இச்சம்பவம் இடம்பெற்றதாகவும் அப்போது இராணுவ உத்தியோகபூர்வ இல்லத்தில் பொன்சேகா வசித்ததாகவும் பிரிகேடிர் வீரசிங்க கூறினார். அக்காலத்தில் பொன்சேகாவின் பாதுகாப்புக்கு இராணுவ சிப்பாய்கள் நியமிக்கப்பட்டிருந்ததாகவும் ஆனால் அவர்களின் எண்ணிக்கை மற்றும் தலைவர் விபரங்களை தன்னால் கூறமுடியாதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலதிக குறுக்கு விசாரணை ஜூலை 20 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’