வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 26 ஜூன், 2012

எம்.வி. சன் ஸீ கப்பலில் ஆட்களை கடத்திய நபர் கைது



னடாவுக்கு 492 தமிழ் குடியேற்றவாசிகளை கடத்திய குற்றச்சாட்டின் பேரில் ஒருவரை கனேடியப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இலங்கையில் இருந்து வந்த விமானத்தில் பயணித்த நடராஜா மகேந்திரன் என்ற நபர் பிரச்சினை ஏதும் இன்றி; ரொரோன்டோ பியர்ஸன் சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 2010ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவை சென்றடைந்த எம்.வி. சன் ஸீ கப்பலின் வருகை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட 6 பேரில் நடராஜா மகேந்திரனும் அடங்குகின்றார். தாய்லாந்து, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், நோர்வே பொலிஸார் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். இந்த 6 பேரில் 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 4 பேர் கனடாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் கனேடிய பொலிஸார் கூறினர். இவர்களில் ஒருவர் பிரான்ஸில் இருந்து நாடு கடத்தப்படவுள்ளார். ஆறாவது நபரை கைதுசெய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’