நா டாளவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வாழ்வெழுச்சி வேலைத்திட்டத்தின் வவுனியா மாவட்டத்திற்கான கண்காட்சி இன்றைய தினம் (09) வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
கைத்தொழில் அபிவிருத்தி வாணிப அமைச்சர் றிசாட் பதியூதீன் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ சந்திரசிறி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். வவுனியா மாவட்ட செயலாளர் பந்துல அரிச்சந்திர அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு.சிவஞானசோதி அவர்கள் வாழ்வெழுச்சி திட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கவுரையாற்றினார். வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ சந்திரசிறி அவர்கள் கருத்துத் தெரிவிக்கும் போது வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் மன்னார் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இவ்வாறான கண்காட்சிகள் நடாத்தப்பட்டு பயனாளிகள் பலர் நல்ல பயனை அடைந்திருப்பதாகவும் அதன் இன்னொரு கட்டமாக இன்றைய தினம் வவுனியா மாவட்டத்தில் இக்கண்காட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வடமாகாணத்தில் இவ்வாறான கண்காட்சிகளை ஆரம்பித்து கிராமிய பொருளாதாரத்தை மேம்பாடடையச் செய்வதையிட்டு கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு தனது நன்றியினையும் பாராட்டினையும் தெரிவித்துக் கொள்வதாகத் தெரிவித்தார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உரையாற்றும் போது இவ்வாறான அரிய வாய்ப்புக்களை பயன்படுத்தி எமது மக்கள் தமது பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்வதற்கு முன்வர வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். கடந்த காலம் எமது தமிழ் தலைமைகள் விட்ட தவறுகளினால் எமது சமுதாயம் பாரிய அழிவுகளை சந்திந்திருந்ததை உணர்த்திய அமைச்சர் அவர்கள் இன்றும் கூட ஒருசாரார் எமது மக்களின் அவல நிலையை முன்வைத்து தமது அரசியல் பிழைப்பினை நடாத்தி வருவதாகவும் அவர்களை இனம்கண்டு எமது மக்கள் தங்களை வாழ்வதாரரீதியில் நிலைநிறுத்திக் கொள்வதற்கு சந்தர்ப்பங்களை பயன்படுத்தி தீயசக்திகளுக்கு துணைபோகாமல் நல்ல திசையில் முன்னேற முன்வர வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்
.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’