வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 28 ஜூன், 2012

எதிர்காலத்தில் கிளிநொச்சி மாவட்டம் கல்வித்துறையில் பாரிய முன்னேற்றங்களை எட்டும் - ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்


கி ளிநொச்சி மாவட்டத்தில் ஓலைக் கொட்டகைகளிலும் மர நிழல்களிலும் அமர்ந்திருந்து மாணவர்கள் கல்வி கற்ற நிலைமை இன்று மாற்றப்பட்டிருக்கின்றது. இவ் வருடத்துடன் அத்திட்டம் பூரணப்படுத்தப்படும் என பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
பூநகரி ஞானிமடம் அ.த.க பாடசாலையின் 61வது ஆண்டு நிறைவு விழாவில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் கிளிநொச்சி மாவட்டத்திலே கல்வியில் நாம் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கின்றோம். அதாவது ஓலைக் கொட்டகைகளிலும் மர நிழல்களிலும் அமர்ந்திருந்து மாணவர்கள் கல்வி கற்ற நிலைமை இன்று மாற்றப்பட்டிருக்கின்றது. இவ்வருடத்துடன் அது பூரணப்படுத்தப்படும். இதேவேளை இவ் ஞானிமடம் அ.த.க பாடசாலை எதிபார்க்கும் கட்டட வளங்களை பெற்றுக் கொள்வதற்கு இப் பாடசாலையின் மாணவர் தொகை அதிகரிக்கப்பட வேண்டும். இன்றுள்ள தொகையைப் போல் மேலும் இரண்டு அல்லது மூன்று மடங்கு தொகை மாணவர்களை உள்வாங்குவதற்தான நிலைமை உருவாக்கப்படும் போதே அதற்கான சாத்தியப் பாடுகளை உறுதி செய்யமுடியும். பூநகரிப் பிரதேசம் எமது நாட்டிலே வரலாற்று முக்கியத்துவம் பெற்ற பிரதேசம். ஏ 32 வீதி புனரமைக்கப்பட்டு அதற்கூடான போக்குவரத்து சீராக நடைபெறுகின்ற சந்தர்ப்பத்தில் ஏ 9 வீதியை விடவும் பிரசித்தி பெற்ற வீதியாக இது மாற்றமடையும் அதேவேளை இப்பகுதியில் நிலவும் நீர் பற்றாக்குறைக்கும் தீர்வு காண்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனவே எதிர்காலத்தில் மீளவும் இப்பகுதியை நோக்கி மக்கள் வருவார்கள் அப்போது இப் பாடசாலையின் மாணவர் தொகையும் அதிகரிக்கும் என்ற சாதகமான நிலைப்பாட்டை நாம் அறிவோம். அதனடிப்படையில் இப் பாடசாலையின் வளப் பற்றாக்குறைகள் தொடர்பாக சாதகமான தீர்மானங்ளை எடுக்கவேண்டும் என்ற விடயத்தில் நாம் மிகுந்த கரிசனையாக உள்ளோம். இதேவேளை இப் பகுதியிலேயே மாணவர்களை அதிகமாகக் கொண்ட பல பாடசாலைகளில் நிலவும் வளப் பற்றாக்குறைகளுக்கு தீர்வுகாணப்பட வேண்டிய கடப்பாட்டை நாம் கொண்டுள்ளோம். அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில் அறுபத்தோராவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் இப்பாடசாலை இன்று வியாபித்திருக்க வேண்டும். ஆனால் கடந் கால யுத்த சூழல் ஏற்படுத்திய பாதிப்புக்களால் இப் பகுதியின் கல்வித்துறை உட்பட அனைத்து துறைகளின் வளர்ச்சியிலும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. எனவே மீளவும் இவற்றைக் கட்டியெழுப்ப நாம் உழைத்து வருகின்றோம். ஆசிரியர் வளப்பங்கீடுகளை சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் நாம் மிகுந்த கரிசனையோடுள்ளோம். அதை கிளிநொச்சி கல்வி வலயத்திலே நடைமுறைப்படுத்தியும் வருகின்றோம். அதற்கமைவாக நகர்ப்புறத்திற்கு அப்பால் உள்ள பாடசாலைகளிலிருந்து ஆசிரியர் வளங்களை பங்கீடு செய்யும் நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. அடுத்து வரும் சில வாரங்களில் நியமனம் பெறவுள்ள 260 வரையான கல்வியியற் கல்லூரி ஆசிரியர்களில் அதிகளவானவர்களை கிளிநொச்சி மாவட்டத்திற்கு வழங்க வேண்டுமென நாம் கல்வி அமைச்சிடம் கோரியுள்ளோம். ஏனெனில் வடமாகாணத்திலே அளவுக்கு அதிகமான ஆசிரியர் வளமிருந்த போதும் அவர்கள் அனைவரும் குறித்த சில பகுதிகளில் மட்டும் குவிக்கப்பட்டிருப்பதனாலேயே ஏனைய பகுதிகளில் வளப் பற்றாக்குறைகள் நிலவுகின்றன. எனவே அவற்றை சீர்செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாகாண கல்வி அமைச்சிடம் கேட்டுள்ளோம் இவ்விடையத்தை ஆளுநரின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளோம். எனவே எதிர்காலத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வித் துறையானது பாரிய முன்னேற்றங்களை எட்டும் என ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் அவர்கள் மேலும் குறிப்பிட்டார். பூநகரி ஞானிமடம் அ.த.க பாடசாலையின் 61வது ஆண்டு விழாவும் பரிசளிப்பு விழாவும் இன்றையதினம் (26) காலை 10.00 மணிக்கு ஆரம்பமானது. இதில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் பாடசாலை சமூகத்தினரால் ஆக்கப்பெற்ற அரும்பு ஒன்று எனும் சஞ்சிகையினையும் வெளியிட்டு வைத்தார். இந் நிகழ்வில் பூநகரி பிரதேசசபையின் கௌரவ தவிசாளர் சிறீஸ்கந்தராசா பிரதேச சபை உறுப்பினர் இராசலிங்கம் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் முருகவேல் பூநகரி பிரதேச செயலர் வசந்தகுமார் பூநகரி கோட்டக் கல்வி அதிகாரி தர்மரத்தினம் ஈ.பி.டி.பியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன் கிளிநொச்சி கல்வி வலய தமிழ்ப் பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி மதுரநாயகம் ஓய்;வு பெற்ற வலயக் கல்விப் பணிப்பாளர் பொன்தில்லைநாதன் ஆகியோரும் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
















0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’