வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 29 ஜூன், 2012

இலங்கையை வந்தடைந்தார் சிவ்சங்கர் மேனன்



ந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் நேற்று வியாழக்கிழமை இரவு இலங்கையை வந்தடைந்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு சுமார் 3 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் இலங்கை அரசாங்கம் அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தயக்கம் காட்டுவதால் உண்டான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காகவே அவர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைக்கான குறுகியகால விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் ஏனைய அதிகாரிகளையும் இன்று வெள்ளிக்கிழமை சந்திக்கவுள்ளார். யுத்தம் நடந்தபோதும் யுத்தத்தின் பின்னரும் அவர் வெளிவிவகார செயலாளர் என்ற வகையில் மேற்கொண்ட முன்னைய விஜயங்ககளின்போது இந்தியாவின் எதிர்பார்ப்புக்களை கோடிட்டுக் காட்டியதுடன், யுத்தத்தின் பின்னரான நேர்மையான நல்லிணக்க பாதையில் செல்ல இலங்கைக்கு ஊக்கமளித்தார். ஆனால் அது நிறைவேறவில்லை. மாறாக இலங்கை முற்றுமுழுதான வித்தியாசமான பாதையில் செல்கின்றது. வடக்கில் உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைகளை முன்னெடுப்பதற்கு மேலாக அரசை பாதுகாப்பதில் முழுக் கவனத்தையும் செலுத்திவருகின்றது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’