வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 7 ஜூன், 2012

சுதந்திரம், ஜனநாயகத்தை விரும்புவோரின் அழுத்தமே விடுதலைக்கு காரணம்: பொன்சேகா



லரதும் தேவையின் நிமித்தம் சில காலங்களாக சிறைவாசம் அனுபவித்த போதிலும் என்னை விடுதலை செய்ய வேண்டிய சூழ்நிலை அரசாங்கத்துக்கு ஏற்பட்டு விட்டது. அதனால் என்னை விடுதலை செய்துவிட்டார்கள்' என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார்.
'சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை விரும்பும் இலங்கையர்களதும் உலகவாசிகளினதும் அழுத்தங்களின் நிமித்தமே எனக்கு இந்த விடுதலை கிடைக்கப்பெற்றுள்ளது' என்றும் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்தார். இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற வீரர்களுக்கு அடைக்கலம் கொடுத்து அரசுக்கு எதிராக சதி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா மற்றும் அவரது செயலாளர் சேனக டி சில்வா ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்கு இன்று வியாழக்கிழமை, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஷ முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இருப்பினும், சேனக டி சில்வா, சுகவீனம் காரணமாக இன்று மன்றில் சமூகமளிக்கவில்லை. இதனால் இந்த வழக்கு விசாரணையினை எதிர்வரும் 21ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிபதி உத்தரவு வழங்கினார். நீதிமன்றுக்கு சமூகமளித்திருந்த சரத் பொன்சேகா, அங்கிருந்து வெளியேறும் போது ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’