நித்தியானந்தா ஒரு குழந்தை. அவரை விட்டு விடுங்கள் என்று போலீஸாரிடம் ஒரு இளம் பெண் விஞ்ஞானி கெஞ்சியதால் போலீஸார் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தனர்.
அந்தப் பெண் எம்.ஐ.டியில் நானோ டெக்னாஜலி படித்தவர் என்பதுதான் வியப்பிலும் பெரும் வியப்புக்குரிய விஷயமாகும். நித்தியானந்தா, கடந்த வெள்ளிக்கிழமை மைசூர் சிறையிலிருந்து ஜாமீனில் விடுதலையானபோதுதான் இந்த சம்பவம் நடந்ததாம். சிறை வாசலில் நின்றிருந்த ஐஜி பாஸ்கர் ராவிடம் இப்படிக் கூறியுள்ளார் அப்பெண். அவர் தனது பெயர் உள்ளிட்ட விவரங்களைத் தெரிவிக்கவில்லை. ஆனால் தான் ஒரு விஞ்ஞானி என்று அவர் கூறியுள்ளார். அவர் மட்டுமல்ல, இன்னொரு பெண் டாக்டரும் நித்தியானந்தாவை வெகுவாகப் புகழ்ந்து பேசி அவரை விடுவிக்கக் கோரினாராம். இதுகுறித்து பாஸ்கர் ராவ் கூறுகையில், நித்தியானந்தா எங்களது கடவுள். அவரை விட்டு விடுங்கள் என்று அந்தப் பெண் டாக்டர் கெஞ்சினார். நித்தியானந்தாவின் பக்தர்களாக சமூகத்தில் மிகப் பெரிய இடத்தில் இருப்பவர்கள், குறிப்பாக விஞ்ஞானிகள், டாக்டர்கள், வர்த்தக நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், தொழில்நுட்பப் படிப்பு படித்தவர்கள், ஆடிட்டர்கள் என பலரும் இருப்பது வியப்பாக இருக்கிறது என்றார் பாஸ்கர் ராவ். நித்தியானந்தாவுக்கு ஜாமீன் கிடைத்து அவர் விடுதலையானபோது அவருக்குப் பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பு பாஸ்கர் ராவிடம் கொடுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’