வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 18 ஜூன், 2012

மெத்தியூஸ் அபாரம்: தொடரை கைப்பற்றியது இலங்கை



லங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை அணி திரில் வெற்றி பெற்றுள்ளது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 247 ஓட்டங்களை பெற்றது. இம்ரான் 56 ஓட்டங்களையும், உமர் ஹக்கமால் 55 ஓட்டங்களையும் அதிகூடுதலாக பெற்றனர். இலங்கை அணியின் பந்து வீச்சில் குலசேகர மற்றும் ஜீவன் மெண்டிஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி 49.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 248 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது. துடுப்பாட்டத்தில் ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய டில்சான் 10 ஓட்டங்களுடனும் தரங்க 2 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க இலங்கை அணி ஆம்பமே தடுமாற்றத்தை எதிர்நோக்கியது. தொடர்ந்து களிமிறங்கிய சங்கக்கார நிதானமாக ஆடிய போதும் 40 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க தொடர்ந்து களமிறங்கிய ஜயவர்தன வந்த வேகத்தில் எவ்வித ஓட்டங்களையும் பெறாது முதல் பந்திலேயே ஆட்டமிழந்து சென்றார். தொடர்ந்து களமிறங்கிய சந்திமால் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 54 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். அடுத்து வந்த திசேர பெரேரா எவ்வித ஓட்டங்களும் பெறாது ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து களம் வந்த திரிமனே 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மெத்தியூஸ் அரைச் சதத்தை கடந்தார். எனினும் மெத்தியூசுடன் இனைந்து அதிடியாக துடுப்பெடுத்தாடிய ஜீவன் மெண்டிஸ் 19 ஓட்டங்களுடன் ஆட்டமிந்தார். இதனையடுத்து வெற்றி பாகிஸ்தான் அணியின் பக்கம் சென்றது. எனினும் இறுதிவரை போராடிய மெத்தியூஸ் அணியின் வெற்றியை உறுதிசெய்தார். இதனையடுத்து இரசிகர்கள் மைதானத்துக்குள் இறங்கி கோசமிட்டு தமது சந்தோசத்தை வெளிப்படுத்தினர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’