வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 30 ஜூன், 2012

அரசியல் தீர்வில் இந்திய ஈடுபாட்டின் மற்றொரு படி: மேனனின் விஜயம் குறித்து சம்பந்தன்


மிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு காண்பதில் இந்தியாவின் ஈடுபாடு மேலும் நெருக்கமடைவதற்கான ஒரு படியாக இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசர் சிவ் சங்கர் மேனனின் இலங்கை விஜயத்தை தான் நோக்குவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறினார்.
சிவ்சங்கர் மேனனை நேற்று சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் அதன்பின் டெய்லி மிரரிடம் பேசுகையிலேயே இவ்வாறு கூறினார். அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தமைக்கான காரணத்தையும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்குபற்றுவதிலுள்ள பிரச்சினைகளையும் சிவ்சங்கர் மேனனுக்கு தான் விளக்கியதாக அவர்கூறினார். 'இவ்விடயம் தொடர்பாக நாம் பிடிவாதமாக இருக்க விரும்பவில்லை. இத்தெரிவுக்குழுவானது அர்த்தபூர்வமாக செயற்பட வேண்டும். எனினும் எமது கரிசனைக்குரிய விடயங்கள் உள்ளன. அவற்றை அற்பமானதாக ஒதுக்கிவிட முடியாது' என அவர்கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’