வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 8 ஜூன், 2012

யாழ்.மடம் வீதிப் பகுதிக்கு பொலிஸ் காவலரண் - அமைச்சர் உடனடி நடவடிக்கை


யாழ்.மடம் வீதிப் பகுதியில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் காவலரண் ஒன்றை அமைக்குமாறு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் யாழ்.தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இதன் பிரகாரம் யாழ் மாநகர சபையானது மேற்படி காவலரணுக்குரிய வசதிகளை ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டுமென்றும் அமைச்சர் அவர்கள் யாழ் மாநகர முதல்வருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். அண்மையில் இப்பகுதியில் இரு சாராருக்கிடையில் ஏற்பட்ட மோதல் நிலை காரணமாக இப் பகுதியில் இன்னும் சகஜ நிலை தோன்றாத நிலையில் அப்பகுதி மக்களின் அழைப்பின் பேரில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று (08) காலை அப்பகுதிக்கு விஜயம் செய்தார். இதன்போது குறித்த இரு சாராரும் கலந்து கொண்டு தங்கள் பக்க நியாயங்களை அமைச்சர் அவர்களிடம் முன்வைத்தனர். இருபக்க கருத்துக்களையும் கேட்டறிந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடந்த கால அழிவுகளில் இருந்து மீண்டு நாம் எமக்கான அபிவிருத்திகளை நோக்கி முன்னேறுகின்ற இச் சந்தர்ப்பத்தில் இவ்வாறான மோதல்கள் மீண்டும் எம் மக்களுக்கு பின்னடைவையே கொண்டுதரும் என்பதை சுட்டிக்காட்டினார். இதன் பின்னர் எந்தவிதமான மோதல்களுக்கும் இடமளிக்கக்கூடாது என இரு தரப்பினருக்கும் உணர்த்திய அமைச்சர் அவர்கள் அண்மையில் நிகழ்ந்த மோதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களது விபரங்களை தன்னிடம் சமர்ப்பிக்கும்படியும் கேட்டுக் கொண்டார்.
From June 9, 2012






















0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’