வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 9 ஜூன், 2012

நவநீதம்பிள்ளை மீது இலங்கை குற்றம் சுமத்தமாட்டாது



.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத்திற்குள் இடம்பெற்ற மின்னஞ்சல் பரிமாற்றத்தின் அடிப்படையில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் நோக்கம் இலங்கை வெளிவவிகார அமைச்சுக்கு இல்லை என அவ்வமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறித்து மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் உத்தியோகஸ்தர்களுக்கு அதன் ஆசிய பசுபிக் பிரிவின் தலைவர் ரோய் மங்கோவன் அனுப்பிய மின்னஞ்சல் குறித்தே அவர் இவ்வாறு கூறினார். இதேவேளை, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கே.அமுனுகம இது தொடர்பாக கூறுகையில், மங்கோவனால் அனுப்பப்பட்ட கடிதத்தின் உண்மைத்தன்மை மற்றும் தாக்கங்கள் குறித்து வெளிவிவகார அமைச்சு ஆராய்வதாகவும் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணையை நிறைவேற்றுவதில் மிதமிஞ்சிய ஆதரவை வழங்கியதன் மூலம், தனக்கு வழங்கப்பட்ட ஆணையை நவநீதம் பிள்ளை மீறிவிட்டார் என ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிட பிரதிநிதி தமரா குணநாயகம் கடிதமொன்றில் தெரிவித்துள்ள நிலையில் வெளிவிவகார அமைச்சு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. இத்தீர்மானத்தை நிறைவேற்றப்பட்டவுடன் மங்கோவன் எழுதிய கடிதத்தில், இத்தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலக முக்கிய உறுப்பினர்கள் பலர் வழங்கிய பங்களிப்புகளுக்காக பாராட்டு தெரிவித்திருந்தார். இக்கடிதத்தை சுட்டிக்காட்டிய தமரா குணநாயகம், ஐ.நா. பொதுசபையின் 48/148 தீர்மானத்தால் மனித உரிமைகள் ஆணையாளருக்கு வழங்கப்பட்ட பணியாணைக்கு முரணாக ஆணையாளர் நவநீதம்பிள்ளை நடந்ததால் உருவாகியுள்ள நிலைமைக்கு விளக்கம் அளிக்கும்படி கோரியிருந்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’