வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 14 ஜூன், 2012

நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு த.தே.கூ. உட்படஅனைத்துக் கட்சியினரையும் அழைக்க அரசாங்கம் தொடர்ந்தும் முயற்சி



ரசியல் தீர்வு காண்பதற்காக நிறுவப்படவுள்ள நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உட்பட அனைத்துக் கட்சியினரையும் அழைத்து வருவதற்கான முயற்சிகளில் அரசாங்கம் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றது' என்று என்று ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவையின் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
'13ஆவது திருத்தச் சட்டம், பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் வௌ;வேறு கட்சியினருக்கும் வௌ;வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இவை தொடர்பிலும் இந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுக் கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எட்டப்படும்' என அமைச்சர் சுட்டிக்காட்டினார். நாட்டின் சமாதானத்தை நிலைநிறுத்துவதற்காக அரசாங்கம் சில நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய கடப்பாட்டில் உள்ளது. அதற்கான முயற்சியே இந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவாகும். இதில் பங்குபற்றுவோம், பங்குபற்ற மாட்டோம் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் அடிக்கடி மாறுபட்ட கருத்துக்களை முன்வைத்து வருகின்றது. இருப்பினும் அக்கட்சி உட்பட அனைத்துக் கட்சியினரையும் இந்த குழுவுக்குள் அழைத்து வருவதற்கான முயற்சிகளை அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது. அனைத்துக் கட்சியினரையும் முதலில் இக்குழுவில் அமரச் செய்ய வேண்டும். அதன் பின்னரே நாம் அதில் என்ன பேச வேண்டும் என்பதை தீர்மானிப்போம். அதற்காக குழுக் கூட்டத்தின் போது பேசுவதற்கு எதுவும் இல்லை என்று கூறவில்லை. 13ஆவது திருத்தச் சட்டம், பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் உள்ளிட்ட பல அம்சங்கள் தொடர்பில் அதன்போது பேசப்படும்' என்று அமைச்சர் கெஹெலிய மேலும் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’