
நித்தியாந்தாவின் பிடதி ஆசிரமம் கர்நாடக அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றது. அத்துடன் சோதனைகளை அடுத்து அவ்வாசிரமத்தின் பல அறைகள் பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஆசிரமத்தில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது கஞ்சா பெக்கற்றுகள், ஆணுறைகள், மதுபான போத்தல்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆசிரமத்துக்கு வருகை தரும் பக்தர்களுக்கு புனித நீர் என்ற பெயரில் கஞ்சாவைக் கலந்து கொடுப்பதாக ஏற்கனவே குற்றச்சாட்டு இருந்தது. அதை நிரூபிக்கும் வகையில் இந்த கஞ்சா போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்படுகின்றது. மேலும் சில அறைகளில் வில், அம்பு, திரிசூலம், 5 அடி உயர சாமி சிலைகள், பஞ்சலோக பொருட்கள் என்பன இருந்துள்ளன. அத்துடன் ஆசிரம வளாகத்தில் 3 கார்களும் காணப்பட்டுள்ளன. அதன்மூலம் பணம், நகைகள் உள்பட சில பொருட்களை கடத்த முயற்சி நடந்ததாகவும் பொலிஸார் அதனைத் தடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. போலிஸார் ஆசிரமத்துக்குள் நுழைந்தபோது 200 பக்தர்கள் இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து சில சொத்துப் பத்திரங்கள் கைப்பற்றப்பட்டன. அத்துடன் அவர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்திய பொலிஸார், அவர்களின் விபரங்களைத் திரட்டிச்சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’