வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 14 ஜூன், 2012

தமிழரசுக் கட்சியின் யாப்பு வேண்டுமென்றே தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது'


 
மிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள பிரதான கட்சியான தமிழரசுக் கட்சியின் யாப்பை வேண்டுமென்று பிழையாக மொழிபெயர்த்ததன் காரணமாகவே அது இலங்கையிலிருந்து தமிழ் பகுதிகள் பிரிந்து செல்ல வேண்டுமென்ற நிலைப்பாட்டிலுள்ள கட்சியாக சித்தரிக்கப்படுகின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எ.சுமந்திரன் கூறினார்.
ஒரு அங்கீகரிக்கப்பட்ட மொழி பெயர்ப்பாளரினால் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு தவறாக மொழிமாற்றம் செய்யப்பட்ட கட்சியின் யாப்பு சத்திய கடதாசியாக உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என அவர் 'ஹிந்து' பத்திரிகையுடன் பேசிய போது கூறினார். இப்படி செய்ததற்கு ஒரு உள்நோக்கம் இருக்க வேண்டும் என கூறிய அவர், இலங்கை தமிழரசு கட்சி ஒரு தனி தமிழ் அல்லது முஸ்லிம் அரசு இலங்கையில் அமைய வேண்டுமென்ற கொள்கையை கொண்டதில்லை என கூறினார். ஹிந்து பத்திரிகையில் மே 18 ஆம் திகதி எழுதப்பட்ட செய்தி, இலங்கை தமிழரசுக் கட்சியின் யாப்பின் மொழிபெயர்க்கப்பட்ட பிரதியின் அடிப்படையில் அமைந்தது. அத்துடன் இது பற்றி தமிழரசு கட்சியின் கருத்தையும் கேட்டிருந்தது. 1983 இல் கொண்டுவரப்பட்ட 6 ஆவது திருத்தச் சட்டமானது தனி நாடு அமைப்பதை தமது கொள்கையாக கொண்ட அரிசியல் கட்சிகளை தடை செய்கின்றது. அங்கீகரிக்கப்பட்டாத ஒரு அரசியல் கட்சியான சிங்கள ஜாதிக பெரமுனவின் பொதுச் செயலாளரான அதிகம் அறியப்படாத வழக்குரைஞரான ஒருவர் மனுவொன்றை உயர்நீதிமன்றில் தாக்கல் செய்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பு, இலங்கை தமிழரசு கட்சி, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் தனிநாடு உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட யாப்புகளை உடையன என குறிப்பிட்டிருந்தார். இதனால் இவை அரசியல் கட்சிகள் பட்டியலிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்பது அவரது கோரிக்கையாக இருந்தது. இப்போது அரசாங்கத்துடனுள்ள கட்சிகளை தவிர வேறு கட்சிகள்- தனி தமிழ் தேசத்துக்கான தமது விருப்பத்தை இரகசியமாக வைத்திருக்கவில்லை. மிக அண்மையில் நடந்த தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாநாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவற்றை தீர்க்கும் வழி வகைகள் பற்றி விளக்கமாக பேசினார். அதில் ஒரு பகுதி இவ்வாறு இருந்தது: 'தமிழ் தேசத்தின் அரசியல் உரிமைகளுக்கான போராட்டம் இப்போது முற்றுமுழுதான ஒரு புதிய கட்டத்தில் உள்ளது. தமிழ் மக்களுக்கு தமது உரிமைகளை வழங்குவதில் இவ்வளவு காலமாக தாமதித்துவரும் இலங்கை அரசாங்கம் அப்படி வழங்குவதற்கான எவ்விதமான உண்மையான முயற்சியை மேற்கொள்ளவில்லை என நாம் சர்வதேச சமுதாயத்துக்கு தெளிவாக நிரூபிப்பது அவசியமானதாகும். வேறு வார்த்தையில் கூறினால் ஐக்கிய இலங்கையினுள் நாம் ஒருபோதும் எமது உரிமைகளை பெறப்போவதில்லை. நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் தோல்வியிலேயே முடியும் என்பதை சர்வதேச சமூகம் தானாகவே உணரும்வரை நாம் பொறுமையாக இருக்க வேண்டும். மேலும் அழுத்தி கூறினால் இலங்கை அரசாங்கம் தானாக முன்வந்து ஒரு ஐக்கிய இலங்கையினுள் தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமையை ஒருபோதும் தரப் போவதில்லை என்பதை நாம் அவர்களுக்கு சொல்லாமல் சர்வதேச சமூகம் தானாகவே பட்டுத் தெளிய வேண்டும்'.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’