வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 18 மே, 2012

பொருளாதார மேம்பாட்டிற்கு ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் - அமைச்சர் வேண்டுகோள்



னை சார்ந்த உற்பத்திகளை காலத்திற்கு ஏற்றவகையில் நவீன மயப்படுத்தி அதனூடாக சிறந்த பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்து உழைக்க வேண்மென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
கொழும்பு மருதானையிலுள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் அமைச்சரின் தலைமையில் இன்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். இதன்போது பனை அபிவிருத்திச் சபையின் கீழான மாதிரி பனம் பண்ணைகளில் ஊடுபயிர்ச்செய்கை கால்நடை வளர்ப்பு மற்றும் பண்ணை அமையப்பெற்றுள்ள இடங்களில் பனை சார்ந்த கைத்தொழிற்பேட்டைகளை உருவாக்குதல் போன்ற விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன் பனைசார்ந்த உணவு மற்றும் உணவல்லாத உற்பத்திகளை காலத்திற்கு ஏற்ற வகையில் நவீன மயப்படுத்துவதனூடாக அவற்றினது உள்ளூர் வெளியூர் சந்தை வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்வது அது சார்ந்தவர்களது குடும்பங்களினது பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பிலும் ஆராயப்பட்டது. இதனிடையே பனைசார்ந்த உற்பத்திகளை விற்பனை செய்யும் வகையில் கற்பகம் விற்பனை நிலையங்களை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நவீன முறையில் அமைப்பது மற்றும் எதிர்காலங்களில் பனை அபிவிருத்திச் சபையினூடாக முன்னெடுக்கப்படவேண்டிய பல்வேறு செயற்றிட்டங்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது. இதன்போது அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி பனை அபிவிருத்திச் சபைத் தலைவர் பசுபதி சீவரத்தினம் உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் உடனிருந்தனர்.









0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’