வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 31 மே, 2012

வடமாகாண ஆளுநர் செயலகத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திறந்து வைத்தார்!


டமாகாண ஆளுநரின் செயலகத்தை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் திறந்து வைத்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
யாழ்ப்பாணம் பழைய பூங்கா வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மாகாண ஆளுநரின் செயலகமே இன்றைய தினம் (31) திறந்து வைக்கப்பட்டுள்ளது. முன்பதாக நிகழ்வின் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட அமைச்சர் அவர்கள் பிரதான வாயிலிருந்து மங்கள வாத்தியம் மற்றும் பண்பாட்டு வாத்தியம் சகிதம் நிகழ்விடத்திற்கு அழைத்து வரப்பட்டார். அங்கு மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து சமயத் தலைவர்களின் ஆசிரியுரைகள் இடம்பெற்றன. பெயர்ப்பலகையினை அமைச்சர் அவர்களும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறியும் இணைந்து திரைநீக்கம் செய்து வைத்ததைத் தொடர்ந்து நினைவுக் கல்லையும் திரைநீக்கம் செய்து வைத்தனர். சுமார் 25 மில்லியன் ரூபா செலவில் நவீன வசதிகளைக் கொண்டதாகக் கட்டப்பட்ட இச்செயலகத்தை அமைச்சர் நாடாவை வெட்டி திறந்து வைத்ததுடன் புதிய கட்டிடத் தொகுதியையும் பார்வையிட்டார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் அவர்கள் கடந்த காலங்களில் வடமாகாண ஆளுநரின் செயலகத்ததிற்கென்று நிரந்தரமான கட்டிடம் இல்லாத நிலையில் மக்கள் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வந்துள்ளனர். இப்புதிய செயலகத்தினூடாக எதிர்காலத்தில் மக்கள் தமக்கான தேவைகளை இலகுவாகப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி மக்களுக்கு புதியவரல்ல யாழ் மாவட்டம் உள்ளிட்ட வடமாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் சேவையாற்றி வருகின்றார் என்பதுடன் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள இப்புதிய செயகத்திற்கூடாக மக்களின் சேவைகள் துறைசார்ந்த அதிகாரிகள் ஊடாக இலகுபடுத்தப்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார். இந்த நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் சத்தியசீலன் ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் வடமாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ் உள்ளிட்ட மாகாணத் திணைக்களங்களின் துறைசார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.





















0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’