வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 16 மே, 2012

நாட்டில் எத்தகைய இனவாத சக்திகளும் தலைதூக்க நாம் இடமளிக்கமாட்டோம்:ஜனாதிபதி _



னைத்து விதமான இன வாதத்தையும் அரசாங்கம் நிராகரிக்கின்றது. நாட்டில் எத்தகைய இனவாத சக்திகளும் தலைதூக்க நாம் இடமளிக்கமாட்டோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஊடக நிறுவனங்களின் தலைவர்களை நேற்றுக் காலை அலரிமாளிகையில் சந்தித்துப் பேசிய போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சிங்களவர்களாக இருந்தாலும் தமிழர்கள் அல்லது முஸ்லிம்களாக இருந்தாலும் அனைத்து விதமான இனவாதத்தையும் நாம் நிராகரிக்கின்றோம். இலங்கையில் எந்தவித இனவாத சக்திகளும் தலைதூக்க நாம் இடமளிக்கமாட்டோம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று அலரி மாளிகையில் நடைபெற்ற ஊடக நிறுவனங்களின் தலைவர்களை சந்திக்கும் காலை உணவுக் கூட்டத்தின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். பொறுப்பு மிக்கவர்களாக செயல்படும்படி இலங்கை ஊடக நிறுவனங்களின் தலைவர்களைக் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி அவர்கள் நாட்டில் இனவாத சக்திகள் தலைதூக்க இடமளிக்கக்கூடாது. அதற்கு ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். இலங்கையின் முன்னேற்றத்தையும் அதன் நல்லிணக்க நடவடிக்கைகளையும் இனவாதம் சீர்குலைத்து விடுவதன் காரணமாக வானொலி, தொலைக்காட்சி அலைவரிசைகள், பத்திரிகைகள் ஆகியவற்றின் ஊடாக எந்த விதத்திலும் இனவாத ஆக்கக் கூறுகள் தலைதூக்க இடமளிக்க வேண்டாமென அனைத்து ஊடகத் தலைவர்களையும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார். இலங்கையிலிருந்து பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பின்னர் இலங்கை வாழ் மக்கள் அனைவரும் சமாதானமாகவும் ஐக்கியமாகவும் வாழ்வதையே தான் பார்க்க விரும்புவதாக ஜனாதிபதி தெரிவித்தார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’