வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 23 மே, 2012

தேசிய அருங்கலைகள் பேரவையின் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் அவர்கள் ஆராய்வு!


பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழான தேசிய அருங்கலைகள் பேரவையினது முதலாம் காலாண்டுக்கான செயற்திட்டங்கள் தொடர்பிலான மீளாய்வுக் கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
கொழும்பு மருதானையில் அமைந்துள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் இம் மீளாய்வுக் கூட்டம் இன்றைய தினம் (21) இடம்பெற்றது. இதன்போது நாடளாவிய ரீதியில் தேசிய அருங்கலைகள் பேரவையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்திட்டங்கள் மற்றும் அவற்றின் அடைவு மட்டங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. அத்துடன் நவீன தொழில்நுட்பத்துடன் கூடியதான பயிற்சிகளை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பெற்றுக் கொள்வதனூடாக பயனாளிகளினது வாழ்வதாரத்தை மேம்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்திய அமைச்சர் அவர்கள் தேசிய அருங்கலைகள் பேரவையினால் நடாத்தப்பட்ட கண்காட்சிகள் மற்றும் பயிற்சி நெறிகள் தொடர்பாகவும் துறைசார்ந்தோரிடம் கேட்டறிந்து கொண்டார். அத்துடன், எதிர்காலங்களில் மென்மேலும் வினைத்திறனுள்ள வகையிலும் பொருளாதாரத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இதனிடையே மகிந்த சிந்தனைக்கமைவாக கைத்தொழில் கிராமங்களைக் கட்டியெழுப்புவது, இந்திய அரசின் நிதியுதவியுடன் யாழ்ப்பாணம் மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் கைப்பணி நிலையங்களை அமைப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. இதன்போது பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி அமைச்சின் இணைப்பாளர் செல்வி தங்கேஸ்வரி அமைச்சரின் ஆலோசகர் திருமதி வி.ஜெகராஜசிங்கம் தேசிய அருங்கலைகள் பேரவைத் தலைவர் புத்திகீர்த்திசேன உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.












0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’