வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 30 மே, 2012

நேர்முக பரீட்சையில் அனைத்து பட்டதாரிகளும் கலந்து கொள்ள வேண்டும்: முரளிதரன் _



ட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களிலுள்ள பட்டதாரிகளின் அரச நியமனம் தொடர்பான நேர்முகப் பரீட்சைகள் எதிர்வரும் செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில் மட்டக்களப்பு கச்சேரியில் நடைபெறவுள்ளது.
இதில் அனைத்து பட்டதாரிகளும் கலந்து கொள்ளவேண்டும் எனவும் மீள்குடியேற்ற பிரதி அமைச்சரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவருமான வி.முரளிதரன் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் கொழும்பில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இந்த விவகாரம் ஆராயப்பட்டு உடனடியாக திறைசேரிச் செயலாளருக்கு ஜனாதிபதி விடுத்த உத்தரவின் அடிப்படையில் இந்த நியமனங்களுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார். இதன் அடிப்படையில் 2009ஆம் ஆண்டு வரையில் பட்டங்களை முடித்த அனைத்து பட்டதாரிகளும் உள்வாங்கப்படுவார்கள். அதன் மூலம் பட்டதாரிகள் எதிர் கொண்டுவரும் பிரச்சினைகள் பலவற்றுக்குத் தீர்வு கிடைக்கும். எனவே விண்ணப்பித்த அனைத்துப்பட்டதாரிகளும் இந்த நேர்முகப்பரீட்சைகளில் பங்குகொள்ள வேண்டும். அந்த வகையில் விண்ணப்பித்த அனைவருக்குமான நேர்முகப்பரீட்சைக் கடிதங்கள் விரைவில் அனுப்பிவைக்கப்படும். பட்டதாரிகளுக்கான அனைத்துவிதமான ஒத்துழைப்புகளையும் வழங்குவதோடு பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க ஆவன செய்வேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’