வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 30 மே, 2012

லைபீரிய முன்னாள் ஜனாதிபதி சார்ள்ஸ் டெய்லருக்கு 50 வருட சிறைத்தண்டனை



லைபீரியாவின் முன்னாள் ஜனாதிபதி சார்ள்ஸ் டெய்லருக்கு ஐ.நா. ஆதரவுடனான போர்க்குற்ற விசாரணை நீதிமன்ற,ம் 50 வருடகால சிறைத்தண்டனை விதித்துள்ளது. தற்போது 64 வயதான சார்ள்ஸ் டெய்லர், ஆயுத கிளர்ச்சியில் ஈடுபட்ட அமைப்பொன்றின் தலைவராக இருந்தவர். 2007 ஆம் ஆண்டு லைபீரியாவின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அவர் 2003ஆம் ஆண்டு சர்வதேச நிர்ப்பந்தங்கள் காரணமாக அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். அவர் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், சியாரா லியோனில் பயங்கர வன்முறையில் ஈடுபட்ட குழுவினருக்கு ஆயுதங்களை விநியோகித்து அவற்றுக்குப் பதிலாக இரத்தினங்களை பெற்றுக்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தார்.
இது தொடர்பாக சியாரா லியோன் தொடர்பான ஐ.நாவின் விசேட நீதிமன்றம் நெதர்லாந்து, தலைநகர் ஹேக்கில் விசாரணை நடத்தியது. இவ்வழக்கில் அவர் குற்றவாளி என கடந்த மாதம் மேற்படி நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இன்று புதன்கிழமை அவருக்கு 50 வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்கு 80 வருடகால சிறைத்தண்டனை விதிக்க வேண்டுமென வழக்குத் தொடுநர்கள் கோரிக்கை விடுத்தனர். எனினும் நீதிபதி ரிச்சர்ட் லூசிக் 50 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இத்தீர்ப்புக்கு எதிராக சார்ள்ஸ் டெய்லர் மேன்முறையீடு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்மேன்முறையீட்டு விசாரணைகள் 6 மாத காலத்திற்கு நீடிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’