தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான திலீப் மாரடைப்பால் மரணம் அடைந்தார். தமிழ் திரையுலகில் 1980களில் முன்னணி நடிகராக இருந்தவர் திலீப். திலீப் கடந்த சில நாட்களாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார். சிறுநீரக கோளாறால் திலீப்பை மைசூரில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சையளித்து வந்தனர். இந்நிலையில், நேற்று உடல்நிலை மிகவும் மோசமானது. டாக்டர்கள் திலீப் உயிரை காப்பாற்ற போராடினர். சிகிச்சை பலனின்றி நடிகர் திலீப் இன்று மரணம் அடைந்தார்.
அவருக்கு வயது 52. திலீப்புக்கு ஹேமா என்ற மனைவியும், பவ்யா, மவுரியா என மகனும், மகளும் உள்ளனர். திலீப் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக மைசூரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது. நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வறுமையின் நிறம் சிவப்பு, தூங்காதே தம்பி தூங்காதே, சம்சாரம் அது மின்சாரம், பெண்மணி அவள் கண்மணி, மாப்பிள்ளை படங்களில் முக்கிய கேரக்டரில் நடிகர் திலீப் நடித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’