வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 26 மே, 2012

நாட்டின் பாதுகாப்பு நலன்களுக்கு ஏற்பவே படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்: இராணுவப் பேச்சாளர்



நாட்டின் பாதுகாப்பு நலன்கள் மற்று தேசிய பாதுகாப்பு நோகங்களை அடைவதற்கு ஏற்பவே இராணுவம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது என இராணுவப் பேச்சாளர் பிரிகேடிய ருவான் வனிகசூரிய கூறியுள்ளார். இலங்கையின் வடக்கு கிழக்கிலும் படையினரின் பிரசன்னமானது நாட்டின் ஏனைய பாகங்களில் உள்ள நிலையை ஒத்திருக்க வேண்டும் என பிரித்தானிய உயர் ஸ்தானிகர் கூறியமைக்கு பதிலளிக்கும் முகமாகவே இராணுவப் பேச்சாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
'வடக்கு கிழக்கிலிருந்து பெரும் எண்ணிக்கையான படையினர் அகற்றப்பட்டு ஏனைய மாகாணங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். நாம் எதிர்கொள்ளும் பாதுகாப்பு அச்சுறுத்தல் முழுமையாக நீங்கவில்லை. ஈழப் பிரிவினைவாதிகளின் நிகழ்ச்சி நிரல் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது. செய்தி ஊடகங்களில் இது மிக வெளிப்படையாக உள்ளது. தமது தேவைகளுக்குப் பொருத்தமெனில் ஆயுத மோதலை ஏற்படுத்துவதற்கு, மேலதிகமாக செயற்படத் தயங்காத பல சக்திகள் உள்ளன' என அவர் கூறினார். எமது நாடு எதிர்கொள்ளும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை இராணுவம் நன்கு புரிந்துகொண்டுள்ளது. தேவைகளை கவனமாக மதிப்பீடு செய்தபின் ஆயுதப் படையினர் வரிசைப்படுத்தப்பட்டு;ள்ளனர். இன்று வடக்கு கிழக்கில் மாத்திரமல்லாமல் தெற்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்தி, மேற்கு, வடமேற்கு மாகாணங்களிலும் படையினர் நிலைகொண்டுள்ளனர். நாடு முழுவதும் சிவில் நிர்வாகம் சிறப்பாக நிலைநாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக வடக்கு கிழக்கில் சிவில் அதிகாரிகள் கோரினால் தவிர படையினர் எந்த பாத்திரத்தையும் வகிப்பதில்லை. நாம் சுதந்திரம் பெற்ற காலத்தில் பிரித்தானிய ஆயுத படைகளிடமிருந்து இராணுவ பாரம்பரியங்களையும் தொழிற்சார் அடிப்படைகளையும் பெற்றுக்கொண்டோம். எமது இராணுவக் கோட்பாடானது, பிரிட்டனின் ஏனைய முன்னாள் காலனித்துவ நாடுகளிலுள்ளதைப் போன்று பிரித்தானிய இராணுவக் கோட்பாட்டின் அடிப்படையிலானவையாகும்' என அவர் கூறினார். இலங்கை பாதுகாப்புப் படைகளின் பிரசன்னமானது சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப உள்ளது. பல சக்திவாய்ந்த நாடுகள் தமது பிரதான நிலப்பரப்பிலிருந்து வெகு தொலைவில் ஆயுதப் படையினரை ஈடுபடுத்தியுள்ளன. சில நாடுகள் தமது பிரதான நிலப்பரப்பிலிருந்து 8000 மைல்கள் தொலைவிலும் படையினரை நிறுத்தியுள்ளன. இலங்கை ஆயுதப்படையினர் ஐ.நா. அமைதிகாக்கும் படை நடவடிக்கைகளுக்காக தவிர, எமது தேசிய எல்லைகளுக்குள்ளே நிறுத்தப்பட்டுள்ளனர்' என அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’