வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 2 மே, 2012

மேலும் இரு இலங்கையரை நாடு கடத்த கனடா உத்தரவு



எம் .வீ.சன்ஸீ கப்பலில் கடந்த 2010 ஆம் ஆண்டு கனடா போய் சேர்ந்த 492 பேரில் மேலும் இருவர் திருப்பி அனுப்பப்படவுள்ளனர். இவர்களில் ஒருவர் ஆட்களை கடத்தியதாகவும் மற்றவர் தமிழ் போராட்ட குழுவின் உறுப்பினர் எனவும் குற்றம் காணப்பட்டுள்ளனர்.
இந்த இருவர் உட்பட திருப்பி அனுப்பப்பட வேண்டுமென கட்டளை பிறப்பிக்கப்பட்டவர்கள் தொகை 19 ஆகும். நாடுகடத்தப்பட உத்தரவிடப்பட்ட இந்த இருவரினதும் பெயர்கள் வெளியிடப்படவில்லை. இவர்களில் ஒருவர் 2005-2006 காலப்பகுதியில் புலிகளுடன் சேர்ந்து இயங்கியவர் எனவும் இவர் பலவந்தமாக புலி இயக்கத்தில் இணைக்கப்படவில்லை எனவும் அறியப்பட்டுள்ளது. இரண்டாவது நபர் கொழும்பிலிருந்த போது கனடாவுக்கு ஆட்களை கடத்தும் கப்பலில் பயணிப்பதற்காக பணம் கொடுத்து இணைந்த கொண்டார். இவர் பாங்கொக் போய்ச் சேர்ந்தப்பின் சன்ஸீ கப்பலின் பணியாளர் குழுவில் குறைந்த சம்பளத்தில் சேர்க்கப்பட்டார். சன்ஸீ பயண அமைப்பாளரான தயாகரன் மார்க்கண்டு கடந்த மாதம் பிரான்ஸில் கைது செய்யப்பட்டார். 2009 இல் 76 இலங்கையர்களை கனடாவுக்கு கொண்டு சென்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த வருடம் நால்வர் டொறன்ரோவில் கைது செய்யப்பட்டனர். மனித கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வகை செய்யும் சட்டங்களை பழமைவாதிகள் கொண்டுவரவுள்ளனர். ஆனால் இவ் வகையான சட்டம் தேவையில்லை என எதிர்க்கட்சிகள் விவாதிக்கின்றன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’