ன்னும் 10 நாட்களுக்குள் நித்தியானந்தாவுக்குக் கொடுக்கப்பட்ட பதவியை மதுரை ஆதீனம் ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் சட்டப்படியான நடவடிக்கைகளை தொடங்குவோம் என்று 13 மடாதிபதிகள் மதுரை ஆதீனத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நித்தியானந்தாவை மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக சமீபத்தில் யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் அறிவித்தார் மதுரை ஆதீனம். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்து அமைப்புகள், கட்சிகள், பொதுமக்களிடையே இது பெரும் அதிருப்தி அலைகளையும், எதிர்ப்புகளையும் கிளப்பியுள்ளது. மேலும் மடாதிபதிகளிடமும் இது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள 13 சைவ மடங்களின் அதிபதிகள் கூடி மயிலாடுதுறையில் உள்ள தர்மபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நேற்று மாலை நடத்தினர். இந்த கூட்டத்திற்கு தர்மபுரம் ஆதீனம், குரு மகா சன்னிதானம் ஸ்ரீ சண்முக தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தலைமை தாங்கினார். குன்றக்குடி ஆதீனம், திருவண்ணாமலை ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம், சூரியனார் கோவில் ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம், செங்கோல் ஆதீனம், துழாவூர் ஆதீனம், வேலக்குறிச்சி ஆதீனம், காமாட்சிபுரி ஆதீனம், ஊரான் அடிகள், சிதம்பரம் மெளன மட சுவாமிகள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது குறித்து ஊரான் அடிகள் கூறுகையில், 1500 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாறு கொண்ட மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நித்தியானந்தாவை நியமித்தது செல்லாது. இது முறைப்படி நடந்த நியமனம் அல்ல. எனவே இதை ஏற்க முடியாது. இன்னும் 10 நாட்களுக்குள் இந்த நியமனத்தை மதுரை ஆதீனம் ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஆதீனத்தை கையகப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்வோம். மேலும் சட்டப்படியான நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். நித்தியானந்தாவின் நியமனம் என்பது, சைவ மடங்களின் மரபுகள், உரிமைகள், விதிகளுக்குப் புறம்பானது என்பது தெள்ளத் தெளிவான ஒன்று. எனவே இதை மதுரை ஆதீனம் வாபஸ் பெற்றேயாக வேண்டும் என்றார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’