வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 7 ஏப்ரல், 2012

அப்பாவி சிங்கள் முஸ்லிம் மக்களைக் கொலைகள் செய்வதர்க்குத்தானே புலம்பெயர் புலி ஆதரவு மக்கள் பணம் கொடுத்தவர்கள் சிங்களப் பாசிச அரசுகளின் இராணுவம் இப்படி மக்களைக்கொன்று குவிக்கின்றார்கள் என்பதால்த்தான் விடுதலை அமைப்புக்கள் தோன்றின அவர்களே மக்களைக் கொலை செய்வதா ?வேலியே பயிரை மேய்ந்த கதை? இதற்க்கு கைதட்டல்கள் வேறு


வுனியா புளியங்குளம் பனை அபிவிருத்திச் சபையின் கற்பகச் சோலை மாதிரி பனந்தோட்டத்தையும் பனை அபிவிருத்திச் சபையின் மாவட்டக் காரியாலயத்தையும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பார்வையிட்டதுடன் அங்கு கால்நடைப் பண்ணையொன்றினை அமைப்பது தொடர்பாகவும் ஆராய்ந்தறிந்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
ஏ-9 வீதி புளியங்குளத்தில் அமையப் பெற்றுள்ள மாவட்டக் காரியாலயத்திற்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அவர்கள் காரியாலயத்தையும் வளாகத்தையும் பார்வையிட்டார். அத்துடன் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட அவ்வளாகத்தில் நல்லின கால்நடைகளை வளர்ப்பதன் ஊடாக பயன்களைப் பெற்றுக் கொள்வது தொடர்பாகவும் ஆராய்ந்தறிந்து கொண்டார். முக்கியமாக எல்லைகளை அடையாளப்படுத்துவது மற்றும் வளாகத்தில் மரக்கன்றுகளை நாட்டுவது தொடர்பிலான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு துறைசார்ந்தோருக்கு அமைச்சர் அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார். இதன்போது பனை அபிவிருத்திச் சபையின் பொது முகாமையாளர் லோகநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.











0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’