வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

அரசுடனான பேச்சுவார்த்தைக்கு மூன்றாம் தரப்பு தேவையில்லை : இரா. சம்பந்தன்


ரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளுக்கு மூன்றாம் தரப்பின் தலையீடு தேவையில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "தீர்வுத்திட்டமொன்றை முன்வைப்பது தொடர்பில் ஏற்கனவே பல தடவைகள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்தப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு மூன்றாம் தரப்பின் ஒத்துழைப்பு அவசியமற்றது. கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தம் அவசியம் எனக் குறிப்பிட்டுள்ள போதிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது மூன்றாம் தரப்பு அவசியமற்றது என்ற உத்தியோகபூர்வ நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பில் எமது கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் பேச்சுவார்த்தைகளைத் தொடர்வதில் தடையில்லை. பேச்சுவார்த்தைகளைத் தொடர்வது குறித்து அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும்" என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’