ததமிழீழம் குறித்துப் பேச திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு எதுவித தகுதியுமில்லை என மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
"இலங்கையில் தமிழர்களை அழிக்க அனைத்து வகையிலும் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு உதவி செய்தது. மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக உள்ளிட்ட கட்சிகள் எல்லாம் அதற்குத் துணைபோயினவே அன்றி எதிர்த்து எதுவுமே பேசவில்லை. இலங்கைக்கு ஆயுத உதவி செய்தபோதோ, படுகொலைகள் அரங்கேறிய போதோ அவற்றைத் தடுத்து நிறுத்தக் குரல் கொடுக்காமல் மௌனம் காத்தார் கருணாநிதி. ஆனால், இப்போது தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று குரல் எழுப்புகிறார். தனி ஈழம் குறித்துப் பேச அவருக்கு எந்தத் தகுதியும் இல்லை" என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’