வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

'பொன்சேகாவுக்கான தண்டனை குறைக்கப்பட மாட்டாது


ன்னடத்தை அடிப்படையில் சிறைத்தண்டனை குறைக்கப்படும் திட்டமானது முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்குப் பொருந்தாது என சிறைச்சாலைகள் ஆணையாளர் பி.டபிள்யூ. கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
இராணுவ நீதமன்றத்தின் கீழ் பொன்சேகா குற்றவாளியாக காணப்பட்டமையே இதற்குக் காரணம். தனது மருமகனுக்கு தொடர்புள்ள நிறுவனத்திற்கு ஒப்பந்தமொன்றை வழங்கியமைக்காக சரத் பொன்சேகாவுக்கு இராணுவ நீதமன்றம் வழங்கிய 30 மாத கால தண்டனை 2010 ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகி 2013 மார்ச் மாதம் முடிவடைகிறது என சிறைச்சாலைகள் ஆணையாளர் பி.டபிள்யூ. கொடிப்பிலி தெரிவித்துள்ளார். நன்னடத்தை அடிப்படையில் பொன்சேகாவின் தண்டனைக்காலம் 24 மாதங்களாக குறைக்கப்பட்டு கடந்த வியாழக்கிழமையுடன் அவரின் தண்டனைக் காலம் முடிவடையும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. வெள்ளைக்கொடி வழக்கிலும் பொன்சேகாவுக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அவர் மேன்முறையீடு செய்துள்ள நிலையில் அவருக்கு பிணை வழங்குமாறு கோரி கடந்த வியாழனன்று உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. இதேவேளை, புதிய நிலைமை குறித்து கருத்து தெரிவித்த பொன்சேகாவின் வழக்குரைஞர் நளின் லத்துவஹெட்டி, பொன்சேகாவை இலக்குவைத்து புதிய வாதங்களை சிறைச்சாலை அதிகாரிகள் முன்வைக்கிறார்கள் என்றார். 'இந்த வாதம் செல்லுபடியாகாது. ஏனெனில் அரசியலமைப்பின்படி இராணுவ நீதிமன்றமும் ஏனைய நீதிமன்றங்களைப் போன்றதாகும் என பொன்சேகாவின் ஒரு வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது' என அவர் கூறினார். இராணுவ நீதிமன்றத்தினால் குற்றவாளியாக காணப்பட்டு நன்னடத்தை அடிப்படையில் தண்டனைக் காலம் குறைக்கப்பட்ட ஏனைய கைதிகள் உள்ளனர் எனவும் அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’