வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 11 ஏப்ரல், 2012

வடமாகாண அபிவிருத்தி தொடர்பில் விரிவாக கலந்துரையாடல்

மக்களுக்கு சரியான வழியைக் காட்டும் அதேவேளை அவர்களது வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது எமது அரசியல் பணி என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் அலுவலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற வடமாகாண அபிவிருத்தி மற்றும் மேம்பாட்டு திட்டம் தொடர்பாக மக்கள் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த கால தமிழ் அரசியல் வாதிகளின் தவறான வழிநடத்தல்கள் காரணமாகவே எமது மக்கள் உயிர் உடைமை இழப்புக்களை சந்தித்ததுடன் சொல்லொணா துன்ப துயரங்களையும் அனுபவித்து வந்தனர். இந்த நிலையில் எமது மக்களுக்கு சரியான வழியைக் காட்டுவதுடன் அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவதற்கான செயற்திட்டங்களையே நாம் முன்னெடுத்து வருகின்றோம். இந்நிலையிலேயே இணக்க அரசியலை தெரிவு செய்துள்ளதுடன் எமது மக்களுக்கான அரசியல் உரிமை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வைக் காண முடியுமென்றும் நம்புகின்றோம். இதனிடையே கடந்த 20 வருட காலமாக நாம் எதைச் சொல்லி வந்தோமோ அவற்றில் பல விடயங்கள் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினது அறிக்கையிலும் குறி;ப்பிடப்பட்டுள்ளது. இதற்கு அமைய அவ்வறிக்கையினை வரவேற்றும் அதேவேளை ஈ.பி.டி.பி. கட்சியைப் பற்றி சொல்லப்பட்ட விடயத்தை முற்றாக நிராகரித்தும் உள்ளோம். உள்நோக்கம் காரணமாகவே ஈ.பி.டி.பி. மீது இவ்வாறான அவதூறுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்தக் குற்றச்சாட்டு அபாண்டமான பொய் என்பதை நிரூபிக்கும் ஆதாரங்களை நான் பாராளுமன்றத்திலே சமர்ப்பித்துள்ளோன். அத்துடன் இது தொடர்பில் நீதிமன்றம் செல்வதற்கும் தயாராகவுள்ளோம் என்றும் சுட்டிக் காட்டினார். தேர்தல் காலங்களின் போது நாம் மக்களுக்கு எந்தெந்த வாக்குறுதிகளை வழங்கினோமோ அவற்றையே முன்னெடுத்து வந்ததுடன் இனிவரும் காலங்களிலும் மக்கள் வழங்கிய ஆணைக்கேற்ப எமது பணிகளை முன்னெடுப்போம் என்றும் உறுதிபடத் தெரிவித்தார். இதன்போது யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு மன்னார் வவுனியா மாவட்டங்களின் ஈ.பி.டி.பி அமைப்பாளர்களும் மக்கள் பிரதிநதிகளும் கலந்து கொண்டனர்.










0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’