கழ்பெற்ற விஸ்டன் கிரிக்கெட் சஞ்சிகையினால் 2011 ஆம் ஆண்டுக்கான உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகவும் அவ்வருடத்தின் உலகின் முன்னிலை கிரிக்கெட் வீரராகவும் இலங்கை வீரர் குமார் சங்கக்கார தெரிவுசெய்யப்பட்டுளளார்.
இன்று புதன்கிழமை இத்தெரிவுகள் அறிவிக்கப்பட்டன. 34 வயதான குமார் சங்கக்கார கடந்த வருடம் சர்வதேச கிரிக்கெட்டில் 2267 ஓட்டங்களைக் குவித்தார். அவர் உலகத் தரம் வாய்ந்த விக்கெட் காப்பாளராகவும் விளங்குகின்றமை குறிப்பிடத்கத்கது. கிரிக்கெட்டின் பைபிள் என வர்ணிக்கப்படும் விஸ்டன் சஞ்சிகையானது 1864 ஆம் ஆண்டுமுதல் வெளியிடப்பட்டு வருகிறது. 1889 ஆம் ஆண்டு முதல் அச்சஞ்சிகையின் ஆசிரியரினால் வருடத்தின் 5 சிறந்த வீரர்கள் தெரிவுசெய்யப்பட்டு கௌரவிக்கப்படுகின்றனர். 2004 ஆம் ஆண்டிலிருந்து உலகின் முன்னிலை வீரருக்கான விருதும் வழங்கப்படுகிறது. இவ்விரு விருதுகளையும் ஒரே தடவையில் வென்ற முதலாவது வீரர் குமார் சங்கக்கார ஆவார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’