வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 26 ஏப்ரல், 2012

சச்சின் டெண்டுல்கர் எம்.பியாக நியமனம்



ந்தியாவின் நாடாளுமன்ற மாநிலங்களவைக்கான (ராஜ்ய சபா) நியமன உறுப்பினராக இந்திய அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
இன்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்த வேளையில் நாடாளுமன்ற ராஜ்ய சபா உறுப்பினர் பதவியை பிரதமர் வழங்கியதாகவும், அதை சச்சின் டெண்டுல்கர் ஏற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 250 உறுப்பினர்களைக் கொண்ட இந்தியாவின் மாநிலங்களவையில் 12 உறுப்பினர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுகின்றனர். இது கலை, இலக்கியம், விஞ்ஞானம், சமூக சேவை போன்றவற்றில் மிகச்சிறந்து விளங்குபவர்களுக்காக வழங்கப்படுவது ஆகும். இந்த அடிப்படையில் தெரிவுசெய்யப்படும் முதலாவது விளையாட்டு வீரர் ஆவதற்கான வாய்ப்பு சச்சின் டெண்டுல்கருக்கு கிட்டியுள்ளது. மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான நியமனத்தை சச்சின் டெண்டுல்கர் ஏற்றுள்ளதை அடுத்து அவரது நியமனம் பற்றிய விபரத்தை பிரதமர் அலுவலகம் உள்விவகார அமைச்சிற்கு தற்போது அனுப்பி வைத்துள்ளது. அங்கிருந்து சச்சின் டெண்டுல்கரின் நியமனம் பற்றிய விபரம் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இந்தியாவின் ஜனாதிபதி - நியமனம் பற்றிய உத்தியோகபூர்வ அறிவித்தலை வெளியிடுவார். பிரபல பொலிவூட் நடிகை ரேகா, 70 வயதான தொழிலதிபர் அனு அகா ஆகியோரும் ராஜ்ய சபா எம்.பிக்களாக இந்திய ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் சச்சின் டெண்டுல்கரின் புகழ் மற்றும் செல்வாக்கு காரணமாக சச்சின் டெண்டுல்கரின் நியமனத்திற்கு எதிர்ப்புக்கள் மேற்கொள்ளப்படமாட்டாது என எதிர்பார்க்கப்படுவதால் சச்சின் டெண்டுல்கரின் நியமனம் முற்றுமுழுதாக உறுதிப்படுத்தப்பட்ட நிச்சயமான ஒன்றாகக் கருதப்படுகிறது. சச்சின் டெண்டுல்கரின் பெயரை இந்தியாவின் ஆளுங்கட்சியாக காங்கிரஸ் கட்சியே பரிந்துரை செய்துள்ளது. இந்தியாவில் பலத்த உள்ளூர் எதிர்ப்புக்களைச் சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சி, இந்த எதிர்பாராத அறிவிப்பை விடுத்துள்ளது. இன்றைய தினம் இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் தலைவி திருமதி சோனியா காந்தியைச் சந்தித்ததன் பின்பு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சச்சின் டெண்டுல்கர் சந்தித்துள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’