வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 12 ஏப்ரல், 2012

யாழ் நூலகத்திற்கு அமைச்சர் திடீர் விஜயம்


யாழ் பொது நூலகக் கட்டிடத்திற்கு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய தினம் (13) திடீர் விஜயம் மேற்கொண்டார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இதன்போது மாணவர்கள் வாசிப்புப் பகுதியை மேலும் விரிவுபடுத்தி வசதிகளை மேற்கொள்ளல் பயற்சிகள் மற்றும் இதர கருத்தரங்குகள் உட்பட்ட தேவைகளுக்காக ஒரு பகுதியை ஒதுக்குதல் கணனி அறையை விரிவுபடுத்துதல் மற்றும் புதிதாக மேலும் பல கணனி இயந்திரங்களைப் பெற்றுக் கொள்ளுதல் உட்பட பல தேவைகள் குறித்து அமைச்சர் அவர்கள் அவதானம் செலுத்தியுள்ளார். அத்துடன் மாநாட்டு மண்டபத்திற்கென புதிதாக மலசலகூட வசதிகளை ஏற்படுத்தல் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது. மேலும் பொது நூலகக் கட்டிடத்தின் மொட்டை மாடியாக இருக்கும் பகுதிகளையும் பயன்படுத்தக் கூடியதாக மாற்றியமைத்தல் தொடர்பிலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அவதானஞ் செலுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் போது வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலக்ஷமி யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா ஆகியோரும் உடனிருந்தனர்.









0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’