யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த இந்திய எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜ் தலைமையிலான நாடாளுமன்றக் குழுவினரை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வரவேற்றார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இரண்டு உலங்கு வானூர்திகளில் வந்திறங்கிய இந்திய நாடாளும்றக் குழுவினரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர்களான முருகேசு சந்திரகுமார் (அசோக்), சில்வேஸ்திரி அலென்ரின் (உதயன்) ஆகியோர் கைலாகு கொடுத்து வரவேற்றனர். முன்பதாக இக்குழுவினர் இன்றைய தினம் வவுனியா மாவட்டத்தின் புளியங்குளம் பகுதியில் மீள்குடியேற்றம் இடம்பெற்ற பகுதிகளைப் பார்வையிட்டதுடன் மெனிக்பாம் நலன்புரி நிலையத்திற்கும் சென்று அங்குள்ள மக்களின் நிலவரங்கள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டனர். அதன் பின்னதாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கும் அங்கு மீள்குடியேற்றம் இடம்பெற்ற சில பகுதிகளுக்கும் விஜயம் மேற்கொண்டு அங்கிருந்து யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த இந்திய நாடாளுமன்றக் குழுவினருக்கு மத்திய கல்லூரி மைதானத்தில் திரண்டிருந்த மக்கள் இலங்கை மற்றும் இந்திய தேசியக் கொடிகளை கைகளில் ஏந்தியவாறு மகிழ்ச்சியினை வெளிப்படுத்தி வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’