வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 18 ஏப்ரல், 2012

அரசியல்தீர்வுக்கு 13 ஆவது திருத்தம் அடிப்படையாக அமையலாம்: சுஷ்மா ஸ்வராஜ்



தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்;கு 13 ஆவது திருத்தச்சட்டம் அடிப்படையாக அமையலாமென இலங்கை அரசாங்கத்திடம் இந்திய லோக்சபா எதிர்க்கட்சித் தலைவியான சுஷ்மா ஸ்வராஜ் கூறியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
சுஷ்மா ஸ்வராஜ் தலைமையிலான இந்திய நாடாளுமன்றத் தூதுக்குழுவினர், சபை முதல்வர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான இலங்கை நாடாளுமன்றத் தூதுக்குழுவினரை நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று சந்தித்து கலந்துரையாடினர். தற்போதைய அரசாங்கமானது பல்வேறு கொள்கைகளையுடைய கட்சிகளினால் அமைக்கப்பட்டதெனவும் அதனால் தேசிய பிரச்சினை தொடர்பில் ஒருதலைப்பட்சமான தீர்மானத்தை மேற்கொள்ள முடியாது எனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இச்சந்திப்பின்போது கூறினார். இதனால், அனைத்து கட்சிகளினதும் இணக்கப்பாட்டுடன் அரசியல் தீர்வுகாண்பதற்காக நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைக்க அரசாங்கம் தீர்மானித்ததாக கூறிய அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இத்தெரிவுக்குழுவிற்கு தனது பிரதிநிதிகளை நியமிக்காததை விமர்சித்தார். ஆனால், அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு வழங்கும் பொறுப்பை அலட்சியப்படுத்தியதாக இச்சந்திப்பில் பங்குபற்றிய த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். தற்போதைய அரசாங்கத்துடன் கடந்த வருடம் ஜனவரி மாதம் தமது கட்சி பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது எனவும் ஆனால் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என சம்பந்தன் எம்.பி கூறினார். கடந்த காலங்களில் தமிழ் கட்சிகளின் ஜனநாயக போராட்டங்கள் எவ்வாறு அடக்கப்பட்டன என்பதையும் அந்நிலைமை தமிழ் ஆயுதகுழுக்கள் தோன்றுவதற்கு வழிவகுத்தமையையும் அவர் விளக்கினார். அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் ஆகியோரின் உரைகளை செவிமடுத்த இந்திய லோக்சபா எதிர்க்கட்சி தலைவி சுஸ்மா ஸ்வராஜ், இயன்றவரை விரைவாக அரசியல் தீர்வுகாண்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வது முக்கியமானது என்றார். 13 ஆவது திருத்தச்சட்டம் அல்லது அதற்கு அப்பாலான அரசியல்தீர்வுக்கு இலங்கை வாக்குறுதியளித்ததையும் அவர் நினைவுகூர்ந்தார். தமது தூதுக்குழு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவை சந்தித்ததாகவும் அவர் வடக்கில் மேற்கொள்ளப்பட்ட மற்றும் தற்போது மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் குறித்து விளக்கியதாகவும் சுஷ்மா ஸ்வராஜ் கூறினார். அரசியல் அபிலாஷைகள் நிறைவேற்றப்படாவிட்டால், அபிவிருத்திப்பணிகள் மாத்திரம் தமிழ் மக்களுக்கு போதுமானதாக அiமையாது என இந்திய தூதுக்குழு சுட்டிக்காட்டியது. இதேதேவைள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு த.தே.கூட்டமைப்பு பிரதிநிதிகளை நியமிக்கும்வரை, தானும் தனது பிரதிநிதிகளை நியமிக்கப்பபோவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்தது. இவ்விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு முக்கிய பங்குதாரர் எனவும் எனவே தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண்பதில் த.தே.கூட்டமைப்பின் பங்குபற்றல் மிக முக்கியமானது எனவும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான ஜோன் அமரதுங்க கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’