வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 24 ஏப்ரல், 2012

வெவ்வேறு மத மக்களிடையே சகவாழ்வை ஏற்படுத்துவதற்கான உபாயம் அரசிடம் இல்லை: கரு ஜயசூரிய



ம்புள்ளையில் நடைபெற்ற சம்பவத்தை நாம் பக்கச்சார்பின்றி அவதானித்தால், வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களிடையே சகவாழ்வை கட்டியெழுப்புவதற்கான உபாயம் அரசாங்கத்திடம் இல்லையென்பது நிரூபணமாகிறது என ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். தம்புள்ளை விவகாரம் தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே கரு ஜயசூரிய இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: "நாட்டில் யுத்தம் முடிவடைந்த பின்னர் வெவ்வேறு இன, மத குழுக்கள் ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும், சகவாழ்வையும் எதிர்பார்க்கின்ற நிலையில் அவர்களுக்கிடையில் அவநம்பிக்கையும், சந்தேகத்தையும் ஏற்படுத்துவது துரதிஷ்டவசமானது. யுத்தத்திற்குப் பின்னரான காலத்தில் நாட்டின் பெரும் எண்ணிக்கையான மக்கள் எதிர்பார்க்கும் விடயம் இதுவல்ல. தம்புள்ளையில் நடைபெற்ற சம்பவத்தை நாம் பக்கச்சார்பின்றி அவதானித்தால், வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களிடையே சகவாழ்வை கட்டியெழுப்புவதற்கான உபாயம் அரசாங்கத்திடம் இல்லையென்பது நிரூபணமாகிறது. வெவ்வேறு இன, மத குழுக்களைச் சேர்ந்த மக்களிடையே நிலவும் ஐக்கியத்திற்கு இடையூறு ஏற்படுத்தாமல், நாட்டை ஆள்வதற்கும், சட்டரீதியான தீர்வுகளைக் காண்பதற்கும் உத்தரவுகளைப் பிறப்பிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் தீர்வு காண்பதற்கு அரசாங்கத்திற்கு அக்கறையில்லை என்பது தம்புள்ளையில் இடம்பெற்ற சம்பவம் உணர்த்துகிறது. அத்துடன் கோரிக்கைக்கும் உத்தரவுக்கும் இடையிலான வித்தியாசத்தையும் அரசாங்கம் புரிந்துகொள்ளத் தவறிவிட்டது. இந்நாட்டின் மக்கள் மற்றும் மதங்களிடையே பிணக்கு ஏற்படும்போது உத்தரவைவிட கோரிக்கையின் பெறுமானமே மோதலில் ஈடுபடும் தரப்பினரை களத்திற்குள் கட்டுப்படுத்திவைக்கும். எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதத்தினால் மூன்று தசாப்தகாலம் துன்பப்பட்ட மக்களிடையே வித்தியாசமான வழிகளில் பிரிவினைகளை ஏற்படுத்தி மீண்டும் அவர்களை துன்பத்திற்குள் தள்ளக்கூடாது என நாம் அரசாங்கத்தை வலியுறுத்துவதுடன், நாட்டில் இடையூறுகளையும் ஒற்றுமையின்மையை ஏற்படுத்துவதற்கு எந்தவொரு வெளிச்சக்திகளாலும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளை தடுப்பது அரசாங்கத்தின் மாற்றமுடியாது பொறுப்பாகும்."

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’